கேஎல் ராகுல்-விராட் கோலி; ஹாங்காங் உடன் இன்றைய போட்டியில் பேட்டிங்கில் திரும்புவார்களா? அணியில் மாற்றம் இருக்குமா?

0
74
Ind vs Hk

தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் 15வது ஆசிய கோப்பை தொடரில் இன்று இந்தியா ஹாங்காங் அணிகள் இடையே போட்டி துபாய் சர்வதேச மைதானத்தில் இரவு ஏழு முப்பது மணிக்கு துவங்க இருக்கிறது!

இந்திய அணி இடம்பெற்றுள்ள குழுவில் ஹாங்காங் மற்றும் பாகிஸ்தான் அணிகள் இடம் பெற்றிருக்கின்றன. இதில் முதல் போட்டியில் பாகிஸ்தான் அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி வீழ்த்தி இருக்கிறது. இந்தப் போட்டியில் ஆங்காங் அணியை வெல்லும் பட்சத்தில் இந்திய அணி அடுத்த சுற்றுக்குள் நுழையும்.

- Advertisement -

பாகிஸ்தான் அணியுடனான போட்டியில் இந்திய அணியில் ரோகித் சர்மா கூறும்பொழுது, ஆடும் அணியில் தினேஷ் கார்த்திக்கை எடுப்பதா இல்லை ரிஷப் பண்டை எடுப்பதா என்கிற குழப்பம் தான் எங்களுக்கு இருந்தது. மற்றபடி எங்களுக்கு எந்த குழப்பமும் இல்லை என்று தெரிவித்து இருந்தார்.

அணியுடனான போட்டியை வைத்துப் பார்க்கும் பொழுது, அறுவை சிகிச்சைக்குப் பிறகு ஐபிஎல் தொடருக்கு பிறகு திரும்ப அணிக்குள் வந்திருக்கும் துவக்க ஆட்டக்காரர் கேஎல் ராகுல் தான் சந்தித்த முதல் பந்திலேயே ஆட்டமிழந்தார். இதை வைத்து அவர் எப்படி இருக்கிறார் என்று கணித்துக் கூற முடியாது. அந்த ஒரு போட்டியை வைத்து அவரை அணியில் இருந்து வெளியே வைப்பார்கள் என்று கூறமுடியாது.

அதேபோல் தினேஷ் கார்த்திக்கையும் ஒரே போட்டியோடு வெளிய வைப்பார்கள் என்று சொல்ல முடியாது. வேகப்பந்து வீச்சுக்கு சாதகமான மைதானத்தில் விளையாடுவதால் ஆவேஸ் கானையும் வெளியில் வைப்பதற்கான வாய்ப்பு குறைவு. எனவே புது வீரர்களுக்கான வாய்ப்பு என்பது இந்தப் போட்டியிலும் இருக்காது என்று நம்பலாம்.

- Advertisement -

ஹாங்காங் அணியை பொறுத்தவரை ஆசிய கோப்பை தகுதி சுற்று போட்டியில், ஆசிய கோப்பையை நடத்தும் யு ஏ இ அணியையும் வீழ்த்தி தொடருக்குள் நுழைந்து இருக்கிறது. கடந்தமுறை 2018ஆம் ஆண்டு 50 ஓவர் வடிவத்தில் நடத்தப்பட்ட ஆசிய கோப்பை தொடரில் இந்திய அணியோடு மோதிய ஆங்காங் அணியின் துவக்க வீரர்கள் சிறப்பாக விளையாடி 175 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து இந்திய அணிக்கு ஒரு நெருக்கடியை கொடுத்தார்கள். இதனால் தற்போதைய இந்திய அணி ஹாங்காங் அணியை சாதாரணமாக எடுத்துக் கொள்ளாது என்றுநம்பலாம்.

மேலும் இந்தப் போட்டி கேஎல் ராகுல் மற்றும் விராட் கோலிக்கு சரளமாக விளையாடுவதற்கு ஒரு களமாக அமைய அதிக வாய்ப்பு இருக்கிறது. இந்த வாய்ப்பை அவர்கள் இருவரும் பயன்படுத்திக் கொள்வார்களா என்று ஆட்டத்தில் தான் பார்க்க வேண்டும். ரோகித் சர்மாவின் பேட்டிங்கை பொறுத்தவரை அவர் எப்பொழுது வேண்டுமானாலும் திடீரென ரன்கள் குவித்து ஒரு தாக்கத்தை உருவாக்கி விடுவார். இன்றைய ஆட்டம் அடுத்த சுற்றுக்கும், ராகுல் மற்றும் விராட் கோலி இருவரும் பழையபடி சரளமாக விளையாடுவதற்கும் ஒரு முக்கியமான போட்டியாக அமையும்!