ஆசியா கேம்ஸ்.. ஓரம் கட்டப்பட்ட உம்ரான் மாலிக்.. ஆர்சிபி வீரர் திடீரென சேர்ப்பு.. காரணம் என்ன?

0
2451
Umran

இந்திய அணி தற்பொழுது ஆசியக் கோப்பை தொடரில் விளையாடுகிறது. இதற்கடுத்து உள்நாட்டில் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக விளையாடுகிறது.

இதை முடித்துக் கொண்டு அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் பங்கேற்க இருக்கிறது. இதற்கென தொடர்ச்சியாக ஒரு இந்திய அணி இயங்கி வருகிறது.

- Advertisement -

இதற்கு நடுவில் இந்திய கிரிக்கெட் வாரியம் இந்த முறை ஆண்கள் மற்றும் பெண்கள் என கிரிக்கெட்டுக்கு சீனாவில் நடைபெறும் ஆசிய விளையாட்டுப் போட்டிக்கு அணிகளை அனுப்புகிறது.

இதில் ஆண்கள் கிரிக்கெட் அணிக்கு ருதுராஜ் கேப்டனாக அறிவிக்கப்பட்டு இருக்கிறார். இந்த அணியில் அறிவிக்கப்பட்டு இருந்த திலக் வர்மா நீக்கப்பட்டு வழக்கமான இந்திய அணி உடன் தொடர்கிறார்.

மேலும் இந்த அணியில் இந்த முறை சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக மிகச் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்திய சிவம் துபேவுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. பஞ்சாப் அணிக்காக அதிரடியாக ஐபிஎல் தொடரில் விளையாடிய ஜித்தேஷ் சர்மாவுக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது.

- Advertisement -

இந்த அணியில் இந்திய அணிக்காக விளையாடி உள்ள மற்றும் ஐபிஎல் தொடரில் குஜராத் அணிக்காக இந்த வாங்கப்பட்ட வேகப் பந்துவீச்சாளர் சிவம் மாவி திடீரென காயம் அடைந்திருக்கிறார்.

இவருக்குப் பதிலாக ஜம்மு காஷ்மீர் எக்ஸ்பிரஸ் உம்ரான் மாலிக் சேர்க்கப்படுவார் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் இந்த நிலையில் அவரை ஆசிய விளையாட்டுப் போட்டிக்கான அணியிலும் தேர்வு செய்யப்படவில்லை.

இவருக்கு பதிலாக ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு விளையாடி வரும் வலதுகை வேகப் பந்துவீச்சாளர் ஆகாஷ் தீப் சேர்க்கப்பட்டு இருக்கிறார்.

இவர் மணிக்கு 140 கிலோ மீட்டருக்கு மேல் வீசும் திறமை கொண்டவர். மேலும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்காக அறிமுகமும் ஆகியிருக்கிறார். உம்ரான் மாலிக் தொடர்ந்து உலக கோப்பைக்கு ஏதாவது தேவை என்றால் எடுத்துக் கொள்வதற்காக, காத்திருப்பில் வைக்கப்படுகிறார் என்று தெரிகிறது!