ஆசிய கோப்பை சூப்பர் 4 சுற்று.. நோ செமி பைனல்.. ஒரு டீமுக்கு 3 மேட்ச்.. யார் யார் உடன் மோதுவார்கள்.. முழு விபரம் இதோ!

0
3221
Adia cup

இந்திய அணி நேற்று முதல் சுற்று இரண்டாவது மற்றும் கடைசிப் போட்டியில் நேபாள் அணிக்கு எதிரான போட்டியில் மழை குறுக்கீட்டுக்கு இடையே, 23 ஓவர்களில் 145 ரன்கள் என்கின்ற இலக்கை 10 விக்கெட் வித்தியாசத்தில் 20.1 ஓவரில் எட்டி வென்று, இரண்டாவது சுற்றுக்கு தகுதி பெற்று இருக்கிறது. நேபாள் அணி தொடரை விட்டு வெளியேறி இருக்கிறது!

நடப்பு ஆசிய கோப்பை தொடரில் இந்தியா, பாகிஸ்தான், நேபாள் அணிகள் ஏ பிரிவிலும், இலங்கை, பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான் அணிகள்பி பிரிவிலும் இடம்பெற்றுள்ளன.

- Advertisement -

ஒரு குழுவில் உள்ள மூன்று அணிகள் அதே குழுவில் உள்ள மற்ற இரண்டு அணிகளுடன் ஒரு போட்டியில் மோத வேண்டும். இதில் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் அடுத்த சுற்றுக்கு முன்னேறும். இதேபோல் அடுத்த குழுவிலிருந்து இரண்டு அணிகள் அடுத்த சுற்றுக்கு முன்னேறும்.

அடுத்த சுற்றுக்கு முன்னேறி வரும் நான்கு அணிகளை கொண்டு சூப்பர்4 சுற்று நடத்தப்படுகிறது. இந்தச் சுற்றில் நான்கு அணிகளும் மற்ற அணிகளுடன் ஒவ்வொரு முறை மோதும். இதில் ஒவ்வொரு அணிக்கும் மூன்று போட்டிகள் கிடைக்கும்.

சூப்பர் 4 இறுதியில் புள்ளி பட்டியலில் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும். இந்தத் தொடரின் இறுதிப்போட்டி செப்டம்பர் 17ஆம் தேதி நடக்கிறது. அந்தப் போட்டியின் மூலம் புதிய ஆசிய சாம்பியன் அணி வெளிவரும்.

- Advertisement -

தற்பொழுது இந்திய அணி ஒரு டிரா மற்றும் ஒரு வெற்றியுடன் தனது குழுவில் ரன் ரேட் அடிப்படையில் இரண்டாவது இடத்தை பிடித்திருக்கிறது. பாகிஸ்தான் அணி முதல் இடத்தில் இருக்கிறது. இரண்டாவது இடம் பிடித்த இந்திய அணிக்கு முதல் போட்டி மீண்டும் பாகிஸ்தான் அணிக்கு எதிராக செப்டம்பர் 10ஆம் தேதி ஆரம்பிக்கிறது. அடுத்து 12 மற்றும் 15 தேதிகளில் மீதமுள்ள இரண்டு போட்டிகள் நடக்கிறது.

பாகிஸ்தான் அணியை தவிர்த்து மோத வேண்டிய மற்ற இரண்டு அணிகள் யார் என்பது, இன்று இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக நடைபெறும் போட்டியின் மூலமாக தெரிய வந்துவிடும். எப்படியும் ஒரு அணி பங்களாதேஷாக இருக்கும். மற்றும் ஒரு அணி இலங்கை ஆக இருக்கவே வாய்ப்பு அதிகம். இன்றைய போட்டியில் இலங்கையை அதிகபட்ச ரன் வித்தியாசத்தில் வீழ்த்தினால் மட்டுமே ஆப்கானிஸ்தான் அணி உள்ளே வரும். இலங்கை வெளியே போகும் நிலை இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது!

மேலும் இரண்டாவது சுற்றான சூப்பர் 4 சுற்று கொழும்புவில் நடத்த திட்டமிடப்பட்டு இருந்தது. ஆனால் கொழும்புவில் தொடர்ந்து மழை நிற்காமல் பெய்து வருகிறது. இதன் காரணமாக இலங்கையின் ஹம்பன்தோட்டா மைதானத்திற்கு போட்டிகள் மாற்றப்படலாம் என்கின்ற உறுதியான தகவல்கள் கிடைக்கிறது!