ஆசியா கோப்பை.. அதிரடி வீரரை நீக்கி இரட்டை சதம் அடித்த வீரரை கொண்டு வந்தது பாகிஸ்தான்!

0
5084
Pakistan

பாகிஸ்தான் ஆண்கள் கிரிக்கெட் அணி தற்போது இலங்கையில் வைத்து ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுகிறது.

இந்த மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் இரண்டு போட்டிகளை வென்று பாகிஸ்தானை தொடரை கைப்பற்றி விட்டது. இந்த நிலையில் இன்று தொடரின் மூன்றாவது போட்டி நடைபெற்று வருகிறது.

- Advertisement -

இந்தத் தொடருக்கு 18 பேர் கொண்ட அணியை பாகிஸ்தான் கிரிக்கெட் தேர்வுக் குழு அறிவித்து இருந்தது. இந்தப் பட்டியலில் இருந்து குறிப்பிட்ட ஒரு வீரர் நீக்கப்படுவார் என்று முன்பே கூறப்பட்டு இருந்தது. ஏனென்றால் ஆசியக் கோப்பை தொடருக்கு 17 பேர் மட்டுமே ஒரு அணிக்கு அனுமதிக்கப்படுவார்கள். இதுவே உலகக் கோப்பைக்கு 15 பேர்தான் அனுமதிக்கப்படுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தற்பொழுது பாகிஸ்தான் தேர்வுக்குழு ஆசிய கோப்பை காண தனது 17 பேர் கொண்ட அணியை அதிரடியாக அறிவித்து இருக்கிறது. இன்று ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட தொடரின் கடைசிப் போட்டியை முடித்துக் கொண்டு, இலங்கையிலிருந்து நாடு திரும்பி, ஆகஸ்ட் 30 ஆம் தேதி அதாவது மூன்று நாளில் ஆசியக் கோப்பையின் முதல் போட்டியில் நேபாள் அணிக்கு எதிராக பாகிஸ்தான அணி விளையாட வேண்டியது இருக்கிறது.

ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கு அறிவிக்கப்பட்ட 18 பேர் கொண்ட அணியில் இருந்து முதலில் சவுத் ஷகீல் ஆசிய கோப்பைக்கு நீக்கப்படுவார் என்று கூறப்பட்டு இருந்தது.

- Advertisement -

இந்த முடிவில் தற்பொழுது பாகிஸ்தான் தேர்வுக்குழு பின்வாங்கி இருக்கிறது. சவுத் ஷகீல் சில வாரங்களுக்கு முன்பு இலங்கை அணிக்கு எதிராக இலங்கையில் பாகிஸ்தான் விளையாடி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் அபாரமாக விளையாடி இரட்டை சதம் அடித்திருந்தார். இவர் மிடில் வரிசைக்கு சரியான வீரராக இருப்பார்.

இந்த காரணத்தினால் இவரை அணியில் வைத்துக் கொண்டு, இலங்கையில் சில வாரங்களுக்கு முன்பு நடைபெற்ற வளரும் வீரர்களுக்கான ஆசிய கோப்பை தொடரின் இறுதி போட்டியில் இந்திய அணிக்கு எதிராக அதிரடியாக சதம் விளாசி இருந்த தயாப் தாகீரை நீக்கி இருக்கிறது. ஆனால் ரிசர்வ் வீரராகத் தக்க வைத்திருக்கிறது!

ஆசியக் கோப்பைக்கான 17 பேர் கொண்ட பாகிஸ்தான அணி :

பாபர் அசாம் (கேப்டன்), ஷதாப் கான் (துணை கேப்டன்), அப்துல்லா ஷபீக், ஃபஹீம் அஷ்ரப், ஃபகார் ஜமான், ஹாரிஸ் ரவுஃப், இப்திகார் அகமது, இமாம் உல் ஹக், முகமது ஹாரிஸ், முகமது நவாஸ், முகமது ரிஸ்வான், முகமது வாசிம் ஜூனியர், நசீம் ஷா, சல்மான் அலி ஆகா, சவுத் ஷகீல், ஷஹீன் அப்ரிடி மற்றும் உசாமா மிர்

ரிசர்வ் வீரர்: தயாப் தாஹிர்