ஆசிய கோப்பை.. நேபாள் அணியில் தினேஷ் கார்த்திக்?.. என்ன பாஸ் நடக்குது.. வைரல் ஆகும் அவரின் பதிலடி ட்விட்!

0
18644
DK

ஆசியக் கோப்பை ஏ குழுவில் இடம் பெற்றுள்ள இந்தியா மற்றும் நேபாள் அணிகள் இன்று தங்களின் முதல் சுற்று ஆட்டத்தின் இரண்டாவது மற்றும் கடைசிப் போட்டியில் இலங்கை கண்டி மைதானத்தில் மோதின!

இந்தக் குழுவில் மூன்றாவது அணியாக இடம்பெற்று இருந்த பாகிஸ்தான் அணி, தனது முதல் சுற்றில் முதல் ஆட்டத்தில் நேபாள் அணியை 238 ரன்கள் வித்தியாசத்தில் வென்றும், இந்திய அணியுடனான இரண்டாவது போட்டி டிராவில் முடிய, இரண்டாவது சுற்றுக்கு தகுதி பெற்று இருக்கிறது.

- Advertisement -

இந்த நிலையில் இன்று இந்தியா நேபாள் அணிகள் விளையாடி வரும் போட்டியை எதிர்பார்த்தது போலவே யாரும் விரும்பத்தகாத வகையில் மழையால் பாதிக்கப்பட்டு நின்று இருக்கிறது. வழக்கமாக ஒரு இன்னிங்ஸ் மட்டுமே நடைபெறுகிறது.

இன்றைய போட்டியில் இந்திய கேப்டன் ரோஹித் சர்மா டாஸ் வென்றார். இந்திய பேட்ஸ்மேன்கள் நேபாள் அணியை வைத்து பயிற்சி பெறும் விதமாக, முதலில் பேட்டிங்கை ரோகித் சர்மா தேர்வு செய்வார் என்று எதிர்பார்த்தார்கள். ஆனால் பந்துவீச்சாளர்களுக்கு ஒரு பயிற்சியாக இருக்கட்டும் என்று பந்துவீச்சை தேர்வு செய்தார்.

இந்த நிலையில் எதிர்பார்க்காத வகையில் இந்திய வீரர்கள் நான்கு ஓவர்களில் மூன்று கேட்ச் வாய்ப்புகளை கோட்டை விட்டார்கள். இதை நன்றாக பயன்படுத்திக் கொண்ட நேபாள துவக்க ஆட்டக்காரர்கள், முதல் பத்து ஓவரில் 65 ரன்கள் சேர்த்தார்கள்.

- Advertisement -

தொடர்ந்து விளையாடிய அந்த அணி 230 ரன்கள் சேர்த்து ஆல் அவுட் ஆனது. அந்த அணியின் 22 வயதான வலது கை விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மேன் ஆசிப் ஷேக் 97 பந்துகளில் 8 பவுண்டரிகள் உடன் 58 ரன்கள் சேர்த்தார். இந்த இன்னிங்ஸில் நேபால் பேட்ஸ்மேன்களின் அதிகபட்ச ரன்னாக இது பதிவானது. மேலும் டெஸ்ட் அந்தஸ்து பெற்ற நாட்டுக்கு எதிராக அடிக்கப்பட்ட இரண்டாவது நேபாள் பேட்ஸ்மேன் அரைசதமாகவும் பதிவானது.

இவர் பார்ப்பதற்கு இந்திய விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மேன் தமிழகத்தைச் சேர்ந்த தினேஷ் கார்த்திக் போலவே இருக்கிறார். எனவே இதை வைத்து ட்விட்டர்வாசி ஒருவர் ” நீங்கள் என்ன செய்தாலும் தினேஷ் கார்த்திக்கை ஆட்டத்திலிருந்து வெளியே வைக்க முடியாது!” என்று நகைச்சுவையாக பதிவிட்டு இருந்தார்.

அந்த ட்விட்டை எடுத்து தினேஷ் கார்த்திக் தற்பொழுது பகிர்ந்து இருக்கிறார். அந்தப் பதிவுக்கு தன்னுடைய வித்தியாசமான உணர்வுகளை வெளிப்படுத்தும் விதமாக மூன்று பொம்மைகளை வைத்திருக்கிறார். தற்பொழுது சமூக வலைதளத்தில் இது பலராலும் நகைச்சுவையாக பகிரப்பட்டு வருகிறது!