ஆசிய கோப்பை.. ரிசர்வ் டேவால் இந்தியாவுக்கு நெருக்கடி.. வரலாற்றில் முதல் முறை.. பாகிஸ்தான் தப்பியது!

0
25700
ICT

பதினாறாவது ஆசியக் கோப்பையில், இரண்டாவது சுற்றுப் போட்டியில் இந்தியா பாகிஸ்தான் அணிகள் மோதிக்கொண்ட போட்டி, மழையால் பாதிக்கப்பட்டு இருக்கின்ற காரணத்தினால், ஆசிய கிரிக்கெட் கவுன்சில் இந்த போட்டிக்கு மட்டும் ரிசர்வ் டே கொடுத்து இருக்கின்ற காரணத்தினால், நாளை ரிசர்வ் டேவுக்கு செல்கிறது!

இந்த போட்டியில் இன்று எந்த ஓவரில், எத்தனை விக்கெட் முடிந்ததோ, அதே இடத்தில் இருந்து நாளை துவங்கி 50 ஓவர்களுக்கு நடைபெறும். நாளைய போட்டியிலும் மழை குறுக்கீடு இருந்தால், அதற்கேற்றபடி ஓவர்கள் குறைக்கப்படும், மழை நிற்காமல் இருந்தால் டிராவில் முடிக்கப்படும்.

- Advertisement -

பொதுவாக ஒருநாள் கிரிக்கெட் போட்டி என்பது வீரர்களுக்கு அதிகப்படியான உடல் உழைப்பை எடுக்கக் கூடியது. குறைந்தபட்சம் ஒருநாள் போட்டி விளையாடி முடித்தால், அடுத்து உடம்பை தயார் செய்வதற்கு ஒரு நாள் இடைவெளியாவது வேண்டும்.

இந்த நிலையில் இன்று இந்திய அணி விளையாடி நாளை மீண்டும் விளையாட செல்வது எந்த வகையிலும் பிரச்சனையாக இருக்கப் போவது கிடையாது. ஏனென்றால் இந்திய அணி பேட்டிங் மட்டுமே செய்கிறது. பாகிஸ்தான் அணிக்கும் இது பெரிய பிரச்சனை கிடையாது.

நாளை போட்டி முழுவதுமாக நடைபெறும் என்றால், இந்திய அணி அதிகபட்சமாக 75 ஓவர்களுக்கு களத்தில் விளையாடி ஆகவேண்டும். விளையாடிய கையோடு அடுத்த நாள் இலங்கைக்கு எதிரான இரண்டாவது சுற்றுப் போட்டியின், இரண்டாவது போட்டியில் விளையாட வேண்டும்.

- Advertisement -

இந்திய அணி இன்று, நாளை, நாளை மறுநாள் என தொடர்ந்து மூன்று நாட்கள் விளையாடுகிறது. இதுவரை இப்படி வெள்ளைப்பந்தில் இந்திய அணி விளையாடுவது கிடையாது. இது வீரர்களுக்கு மிக அதிகப்படியான உடல் களைப்பை உண்டாக்கக்கூடியது. மேலும் இதனால் காயத்தில் இருந்து திரும்ப வந்திருக்கக் கூடிய வீரர்கள், மீண்டும் காயமடைவதற்கும் வாய்ப்புகள் உண்டு.

இந்தியாவில் அடுத்த மாதம் அக்டோபர் ஐந்தாம் தேதி மிகப்பெரிய கிரிக்கெட் நிகழ்வான ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் நடக்க இருக்கின்ற நிலையில், இந்திய அணியின் முக்கியமான வீரர்கள் காயத்தில் இருந்து திரும்பி இருக்கின்ற நிலையில், இந்திய அணி தொடர்ந்து மூன்று நாட்கள் ஒருநாள் கிரிக்கெட் வடிவத்தில் விளையாடுவது நல்ல விஷயம் கிடையாது.

தற்போது விளையாடும் அணியில் காயத்தில் இருந்து திரும்பி வந்த கே.எல்.ராகுல் இடம் பெற்று இருக்கிறார். மேலும் இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் ஜஸ்ப்ரித் பும்ரா, இதுவரை ஒருநாள் கிரிக்கெட்டில் காயத்திலிருந்து திரும்பி வந்து பந்து வீசவில்லை. இப்படி இருக்கும் பொழுது தொடர்ச்சியான கிரிக்கெட் என்பது கவலை அளிக்கக்கூடிய விஷயம். இந்தப் பிரச்சனை பாகிஸ்தான் அணிக்கு கிடையாது. அவர்களுக்கு நாளை மறுநாள் ஓய்வுதான் என்பது குறிப்பிடத்தக்கது!