ஆசிய கோப்பை.. தொடர் மழை எதிரொலி.. இடம் மாறும் போட்டிகள்.. குழப்பத்தில் ரசிகர்கள்.!

0
980

ஆசிய கோப்பைக்கான கிரிக்கெட் தொடர் தற்போது பாகிஸ்தான் மற்றும் இலங்கையில் வைத்து நடைபெற்று வருகிறது. இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை நடைபெறும் ஆசிய கோப்பை போட்டிகளை இந்த வருடம் நடத்தும் உரிமையை பாகிஸ்தான் அணி பெற்றிருந்தது. அரசியல் காரணங்களால் இந்தியா பாகிஸ்தான் செல்ல மறுத்ததால் இந்த வருடத்திற்கான ஆசிய கோப்பை ஹைபிரிட் முறையில் இலங்கை மற்றும் பாகிஸ்தானில் வைத்து நடைபெற்று வருகிறது.

இந்தத் தொடரின் 4 போட்டிகள் பாகிஸ்தானிலும் ஒன்பது போட்டிகள் இலங்கையில் வைத்தும் நடைபெற இருக்கின்றன. இதனிடையே கடந்த ஆகஸ்ட் 30ஆம் தேதி பாகிஸ்தானில் துவங்கிய ஆசிய கோப்பையின் முதல் போட்டியில் நேபால் அணியை 238 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணி வீழ்த்தியது. இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையே நடைபெற்ற இரண்டாவது போட்டியில் இலங்கை அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் பங்களாதேஷ் அணியை வெற்றி கொண்டது.

- Advertisement -

இந்நிலையில் கடந்த சனிக்கிழமை அனைவரும் எதிர்பார்த்த இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டி கண்டி நகரில் வைத்து நடைபெற்றது. இந்தப் போட்டியில் முதலில் ஆடிய இந்தியா அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 266 ரன்கள் எடுத்திருந்தது. ஆனால் இரண்டாவது பேட்டிங்கின் போது மழை குறுக்கிட்டதால் போட்டி டிராவில் முடிவடைந்தது . நேற்று நடைபெற்ற நான்காவது போட்டியில் பங்களாதேஷ் அணி ஆப்கானிஸ்தான் அணியை வீழ்த்தியது. இந்தப் போட்டி பாகிஸ்தானில் வைத்து நடைபெற்றது.

நாளை இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டிக்கு பிறகு வருகின்ற ஆறாம் தேதி முதல் சூப்பர் 4 போட்டிகள் நடைபெற இருக்கின்றன. இதில் நடைபெறும் ஆறு போட்டிகளில் 5 போட்டிகள் கொழும்பு நகரில் வைத்து நடைபெற இருக்கிறது. ஆனால் தற்போது கொழும்பு நகரில் தொடர்ந்து பெய்து வரும் மழையினால் போட்டிகள் நடைபெறுவதில் சிக்கல் ஏற்பட்டிருக்கிறது. ஏற்கனவே இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டி வெற்றி தோல்வியின்றி கைவிடப்பட்ட நிலையில் மேலும் பல போட்டிகள் கைவிடப்படுமா என ரசிகர்கள் குழப்பத்தில் இருக்கின்றனர்.

இது தொடர்பாக ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளதாகவும் போட்டிகளை கொழும்பு நகரில் இருந்து வேறு இடத்திற்கு மாற்றுவதற்கு ஆலோசித்து வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் கண்டி நகருக்கு மாற்றினால் அங்கும் மழை பெய்யக்கூடிய சூழ்நிலை நிலவுவதால் போட்டியை எங்கு மாற்ற என ஆசிய கிரிக்கெட் கவுன்சில் நிர்வாகிகளும் குழப்பத்தில் இருக்கின்றனர். இந்தப் போட்டிகள் தொடர்பான முடிவுகள் 24 மணி நேர முதல் 48 மணி நேரத்திற்குள் எடுக்கப்படும் என ஆசிய கிரிக்கெட் கவுன்சில்க்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

- Advertisement -

இதனால் போட்டிகள் இலங்கை தலைநகரான கொழும்பிலிருந்து வேறு இடத்திற்கு மாற்றப்படுவது தற்போது உறுதியாக இருக்கிறது. எனினும் இது குறித்த அதிகாரப்பூர்வ முடிவுகள் வருகின்ற இரண்டு நாட்களுக்குள் தெரியவரும். சூப்பர் ஃபோர் சுற்றின் முதல் போட்டியை பாகிஸ்தானில் வைத்து நடைபெற இருக்கிறது. இதனைத் தொடர்ந்து நடைபெற இருக்கும் மற்ற ஐந்து போட்டிகளும் தான் கொழும்பில் வைத்து நடைபெற இருக்கிறது . இலங்கை நாட்டில் இந்த முறை பருவமழை கடுமையாக பெய்து வருகிறது. அதிலும் குறிப்பாக கொழும்பு நகரில் இடைவிடாது மழை பெய்து வருவதால் சூப்பர் 4 போட்டிகள் நடைபெறுவதற்கு மிகப்பெரிய சிக்கல் ஏற்பட்டிருக்கிறது.

சூப்பர் 4 சுற்றின் முதலாவது போட்டி பாகிஸ்தானின் நாகூர் நகரில் வைத்து நாம் ஆறாம் தேதி நடைபெற உள்ள நிலையில் அதற்கு முன்பாக கொழும்பில் வைத்து நடைபெற இருந்த போட்டிகள் எங்கு மாற்றப்படும் என ஆசிய கிரிக்கெட் கவுன்சில் அறிவிக்கும். இந்த மழையின் காரணமாக ஏற்பட்டுள்ள புதிய சிக்கல் ஆல் ரசிகர்கள் மிகவும் குழப்பத்தில் இருக்கின்றனர். போட்டிகள் முதலில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்ட பாகிஸ்தானில் கடுமையான வெயில் நிலவி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.