ஆசியகோப்பை 2வது சுற்று.. இந்தியா பாகிஸ்தான் போட்டிக்கு மீண்டும் சிக்கல்.. பிசிசிஐ-யால் வந்த வினை!

0
9840
Asia cup

நடப்பு ஆசியக்கோப்பை தொடரில் முதல் சுற்றுப் போட்டிகள் முடிவடைந்துள்ள நிலையில், இரண்டாவது சூப்பர்-4 சுற்று நடைபெற்று வருகிறது.

இரண்டாவது சுற்றான சூப்பர்-4 சுற்றின் பாகிஸ்தான், பங்களாதேஷ் அணிகள் மோதிக்கொண்ட முதல் போட்டி மட்டும் பாகிஸ்தான் லாகூரில் நடைபெற்றது.

- Advertisement -

இதற்கு அடுத்து இரண்டாவது சுற்று அனைத்து போட்டிகளும் இலங்கை கொழும்பு பிரேமதாச மைதானத்தில் மட்டுமே நடக்க இருக்கின்றன. மேலும் இறுதிப்போட்டியும் இந்த மைதானத்தில் நடக்க இருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இலங்கையில் தற்போது எல்லா இடங்களிலும் பரவலான மழை பெய்து வருகிறது. மழையின் காரணமாக முதல் சுற்றின் ஆட்டங்கள் பெரும்பாலும் இலங்கையில் பாதிக்கப்பட்டது.

மிகக்குறிப்பாக, அனைவராலும் பெரிய அளவில் எதிர்பார்க்கப்பட்ட இந்தியா பாகிஸ்தான் அணிகள் மோதிக்கொண்ட போட்டி ஒரு இன்னிங்ஸ் மட்டுமே நடைபெற்று டிராவில் முடிவடைந்தது. அடுத்து இந்தியா நேபாள் அணியுடன் மோதிய போட்டியில் 23 ஓவர்களாக குறைக்கப்பட்டு போட்டி நடத்தப்பட்டு முடிவு கண்டறியப்பட்டது.

- Advertisement -

இந்த நிலையில் மழை அபாயம் தொடர்ந்து இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கொழும்பில் இருந்து ஹம்பன்தோட்டாவுக்கு இலங்கைக்குள்ளே போட்டிகளை மாற்றலாம் என்று இந்திய கிரிக்கெட் நிர்வாகம் யோசித்தது. ஆனால் திடீரென்று என்ன நினைத்ததோ, அந்த முடிவை கைவிட்டது. தற்பொழுது இதனால் பிசிசிஐ பெரிய விமர்சனத்திற்கு உள்ளாகி வருகிறது. பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய முன்னாள் சேர்மன் வரை கடுமையான விமர்சனத்தை பிசிசிஐ மேல் முன்வைத்து வருகிறார்கள்.

இந்த நிலையில் கொழும்பு மைதான நிர்வாகம் கூறும்பொழுது “மைதானத்தில் அவுட்ஃபீல்டு நன்றாக தண்ணீரால் நனைந்து விட்டது. நாங்கள் மிகக் கடுமையாக உழைத்து வருகிறோம். போட்டிகளுக்கு சரியான நேரத்தில் மைதானத்தைத் தயார் செய்வதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்.

கொழும்பு, பல்லேகல மற்றும் ஹம்பன்தோட்டா மூன்று நகரங்களிலுமே மழைப்பொழிவு தொடர்ந்து இருந்து வருகிறது. ஆனால் நாங்கள் 100 ஊழியர்களை இதற்காகத் திரட்டி இருக்கிறோம். மேலும் நாங்கள் மூன்று மைதானங்களிலும் ஆடுகளங்களை தயார் செய்து வருகிறோம்!” என்று கூறப்பட்டு இருக்கிறது!

அடுத்து இரண்டாவது சுற்று இந்தியா பாகிஸ்தான் மோதிக் கொள்ளும் போட்டி மட்டும் மழையால் பாதிக்கப்பட்டது என்றால், பிசிசிஐ மற்றும் ஏசிசி இரண்டிலும் மிகப்பெரிய பொறுப்பில் இருக்கும் ஜெய் ஷா மிகப்பெரிய விமர்சனத்திற்கு உள்ளாவார்!