ஆசியக்கோப்பை தொடரின் முழு அட்டவணை வெளியானது!

0
1480
Asia cup

ஆசியக் கிரிக்கெட் கவுன்சில் சார்பாக, ஆசியக் கிரிக்கெட் கவுன்சிலின் வருமானத்தைப் பெருக்க, ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் 1984ஆம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வருகிறது. ஆசியக் கோப்பை ஒவ்வொரு முறையும் இரண்டாண்டு இடைவெளிகளில் நடக்கிறது!

1984ஆம் ஆண்டு முதல் நடந்து வரும் ஆசியக் கோப்பையில் இந்திய அணி அதிகபட்சமாக ஏழுமுறை கோப்பையை வென்றுள்ளது. ஆசியக் கோப்பையில் அதிக ரன் அடித்த பேட்ஸ்மேன் இலங்கையின் சனத் ஜெயசூர்யா ஆவார். அவர் 1220 ரன்கள் அடித்திருக்கிறார். அதிக விக்கெட்டுகளை கைப்பற்றிய பவுலராக இலங்கையின் லசித் மலிங்கா 33 விக்கெட்டுகளை கைப்பற்றி முதலிடத்தில் இருக்கிறார்!

- Advertisement -

கடந்த முறை 2018ஆம் ஆண்டு நடந்த ஆசியக்கோப்பையில் இந்திய அணி சாம்பியன் பட்டத்தை வென்று, நடப்பு சாம்பினாக இருக்கிறது. 2018ஆம் ஆண்டு ஆசியக் கோப்பையிலிருந்து 20 ஓவர் போட்டியாக மாற்றப்பட்டது. அதற்கு முன்புவரை 50 ஓவர் போட்டியாக நடைபெற்று வந்தது.

தற்போது 16வது ஆசியக்கோப்பை யுனைடெட் அரப எமிரேட்சில் நடக்க இருக்கிறது. இதற்கு முன்பு இந்தத் தொடர் இலங்கையில் நடத்தப்படுவது உறுதி என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது. ஆனால் இலங்கையில் நிலவிவரும் பொருளாதாரச் சரிவும், அதன் தொடர்ச்சியாக நடக்கும் மக்கள் புரட்சியும், ஆசியக் கோப்பையை யு.ஏ.இ-க்கு மாற்றி இருக்கிறது!

யு.ஏ.இ-யில் நடக்க இருக்கும் ஆசியக் கோப்பையின் முழு அட்டவணை தற்போது வெளியாகி இருக்கிறது. ஆசியக் கோப்பை ஆகஸ்ட் 27ஆம் தேதி தொடங்கி செப்டம்பர் 11 ஆம் தேதி முடிகிறது. போட்டிகள் அனைத்தும் துபாய், சார்ஜா மைதானங்களில் இந்திய நேரப்படி மாலை ஆறு மணிக்குத் துவங்குகின்றன.

- Advertisement -

இந்தியா, பாகிஸ்தான், குவாலிபையர் ஆகிய மூன்று அணிகள் ஏ பிரிவிலும், இலங்கை, பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான் அணிகள் பி பிரிவிலும் இடம்பெறுகின்றன. இரு பிரிவிலும் முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கும் அணிக்கும் அடுத்து தங்களுக்குள் மோதிக்கொள்கின்றன. இதில் முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டியில் விளையாடி, வெற்றிபெறும் அணி சாம்பியன் ஆகும்!

ஆசியக் கோப்பை தொடர் முழு அட்டவணை:

ஆகஸ்ட் 27 – சனி- இலங்கை vs ஆப்கானிஸ்தான்- துபாய்
ஆகஸ்ட் 28 – ஞாயிறு- இந்தியா vs பாகிஸ்தான்- துபாய்
ஆகஸ்ட் 30 – செவ்வாய் – பங்களாதேஷ் vs ஆப்கானிஸ்தான்- ஷார்ஜா
ஆகஸ்ட் 31 – புதன் – இந்தியா vs குவாலிபையர் அணி – துபாய்
செப்டம்பர் 1 – வியாழன் – இலங்கை vs பங்களாதேஷ்- துபாய்
செப்டம்பர் 2 – வெள்ளி – பாகிஸ்தான் vs குவாலிபையர் அணி- ஷார்ஜா
செப்டம்பர் 3 – சனி – B1 vs B2 – ஷார்ஜா
செப்டம்பர் 4 – ஞாயிறு – A1 vs A2- துபாய்
செப்டம்பர் 6 – செவ்வாய் – A1 vs B1- துபாய்
செப்டம்பர் 7 – புதன் – A2 vs B2- துபாய்
செப்டம்பர் 8 – வியாழன் – A1 vs B2 – துபாய்
செப்டம்பர் 9 – வெள்ளி – B1 vs A2 – துபாய்
செப்டம்பர் 11 – ஞாயிறு – இறுதிப்போட்டி – துபாய்