இந்திய கிரிக்கெட்

சூரியவன்சிக்கு தோனியை விட அது அதிகம் கிடைக்கும்.. அந்த குழந்தையை விட்டு விடுங்கள் – அஸ்வின் வேண்டுகோள்

தற்போது 15 வயதில் மிகச் சிறப்பாக விளையாடி வைபவ் சூரியவன்சி மொத்த கிரிக்கெட் உலகையும் ஆச்சரியப்படுத்தி வருகிறார். இந்த நிலையில் அவருக்கு ஒரு குறிப்பிட்ட அழுத்தத்தை வெளியில் இருந்து உருவாக்க கூடாது என ரவிச்சந்திரன் அஸ்வின் கூறியிருக்கிறார்.

- Advertisement -

நேற்று சிஎஸ்கே அணிக்கு எதிரான போட்டிகள் வெறும் 15 பந்தில் தனது ஐபிஎல் அதிவேக அரைசதத்தை வைபவ் சூரியவன்சி அடித்தார். இதைத் தொடர்ந்து அவரது பேச்சு எல்லா பக்கங்களிலும் அதிகரித்திருக்கிறது.

சூரியவன்சிக்கு வாய்ப்பு

நடப்பு ஐபிஎல் தொடர் முடிவடைந்ததும் இந்திய டி20 அணியில் வைபவ் சூரிய வன்சிக்கு உடனடியாக வாய்ப்பு கொடுக்க வேண்டும் என சில முன்னாள் வீரர்கள் வேண்டுகோள் வைக்க ஆரம்பித்திருக்கிறார்கள். இப்படிப்பட்ட திறமை படைத்த ஒரு இளம் வீரரை அதிக நாள் காத்திருக்க வைக்க கூடாது என்று கூறுகிறார்கள்.

மேலும் ராகுல் டிராவிட் அண்டர் 19 கிரிக்கெட்டில் ஒரு வீரர் ஒரு முறை மட்டுமே உலகக் கோப்பையில் விளையாட முடியும் என்று விதியை உருவாக்கி இருக்கிறார். எனவே இதற்கு மேல் அண்டர் 19 உலகக் கோப்பையில் வைபவ் சூரியவன்சி விளையாட முடியாது. எனவே அவர் மேற்கொண்டு இந்திய ஏ அணியில்தான் விளையாடுவார். இதன் காரணமாக சீக்கிரத்தில் அவரை சர்வதேச கிரிக்கெட் விளையாட கொண்டு வர வேண்டும் என்று கூறப்படுகிறது.

- Advertisement -

அவர் ஒரு குழந்தை

இதுகுறித்து ரவிச்சந்திரன் அஸ்வின் பேசும்பொழுது “இப்போது வைபவ் சூரியவன்சி ஒரு வளர்ந்த ஆள் கிடையாது. அவர் ஒரு குழந்தை; வயது 15தான் ஆகிறது. எனவே அவருக்கு இந்திய அணியில் இடம்பெறும் அளவுக்கான பெரிய இலக்கை இப்பொழுது வைக்கக் கூடாது. இந்த 15 வயதில் அவர் ஆடிய ஆட்டத்திற்கு சிஎஸ்கே அணியால் எந்த பதிலையும் கண்டுபிடிக்க முடியாமல் நின்றார்கள்”

இதையும் படிங்க : சூரியவன்சியை விடுங்கள்.. ஜெய்ஸ்வால் விராட் கோலி ஆக மாறியதை பார்த்தீர்களா?.. வேற லெவல் அப்ரோச் – இந்திய முன்னாள் வீரர் பாராட்டு

“தோனி 45 வயது வரை விளையாடுகிறார் என்றால், சூரியவன்சி 40 வயது வரை விளையாடினால் கூட, அவர்கள் இன்னும் இரண்டு தசாப்தம் கிரிக்கெட்டில் காலம் இருக்கிறது. அவரை இப்பொழுது அமைதியாக விட்டு விடுங்கள். சரியான நேரத்தில் இந்தியாவிற்கு விளையாட அவரே வருவார். இந்திய அணிக்கு கட்டாயம் விளையாடிய ஆக வேண்டிய திறமை படைத்தவர். ஆனால் அதற்கு நாம் காத்திருக்க வேண்டும். எதற்காக அவசரப்பட வேண்டும்? என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -
Published by

Recent Posts