நேற்று சிஎஸ்கே அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் வீரர் ஜெய்ஸ்வால் விராட் கோலி போல முதிர்ச்சியோடு பேட்டிங் செய்ததாக ஆகாஷ் சோப்ரா பாராட்டி இருக்கிறார்.
இந்த போட்டியில் ஒரு முனையில் அதிரடியாக விளையாடிய 15 வயதான வைபவ் சூரியவன்சி 15 பந்தில் அரை சதம் அடித்தார். அவரே முழு போட்டியையும் முடித்து வைத்துவிட்டு வெளியே சென்றார்.
ஜெய்ஸ்வால் நிலைமை
ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி 2024 ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பையை வென்றது. அந்த 15 பேர் கொண்ட இந்திய அணியில் மூன்றாவது துவக்க ஆட்டக்காரராக ஜெய்ஸ்வால் இடம்பெற்று இருந்தார். எனவே அடுத்து அவருக்கு ரோகித் சர்மா அல்லது விராட் கோலி இடத்தில் கொடுக்கப்பட வேண்டி இருந்தது.
இந்த நிலையில் அவர் அடுத்து அதிரடியாக இந்திய டி20 அணியில் இருந்து நீக்கப்பட்டார். தற்போது அவர் மீண்டும் இந்திய டி20 அணிக்கு வருவதற்கு குறைந்தபட்சம் ஐபிஎல் தொடரில் 600 ரன்கள் தாண்டி எடுக்க வேண்டிய நிலையில் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இருந்தாலும் அவர் செய்த ஒரு காரியம் நெகிழ்ச்சி அடைய வைத்துள்ளது.
விராட் கோலியை பார்த்தேன்
இதுகுறித்து ஆகாஷ் சோப்ரா பேசும் பொழுது “ஜெய்ஸ்வால் பேட்டிங் செய்யும் பொழுது நல்ல முயற்சியை காட்டினார். எதிர் முனையில் சூரியவன்சியை அதிரடியாக ஆட அனுமதித்தார். அவரிடம் விராட் கோலியின் சாயலை நேற்று பார்க்க முடிந்தது. அதாவது ஒருவர் பரந்த கண்ணோட்டத்தில் இருக்க வேண்டும். அகந்தையை ஒதுக்கி வைக்க வேண்டும். மறுமுனையில் உள்ள பேட்ஸ்மேன் உடன் போட்டியிடக் கூடாது”
இதையும் படிங்க: ருதுராஜ் சொல்ற மாதிரி ஆடினா சிஎஸ்கே ஜெயிக்கவே முடியாது.. இதைத்தான் செஞ்சிருக்கணும் – அம்பதி ராயுடு பேட்டி
“உங்கள் அணி வெற்றி பெறும் பொழுது நீங்கள் ஆட்டம் இழக்காமல் வெளியே செல்வது முக்கியமானது. யார் ஒருவர் தன்னுடைய அணி வெற்றி பெறும்போது அதிக முறை ஆட்டம் இழக்காமல் வெளியே செல்கிறாரோ அவர்தான் நட்சத்திர வீரராக மாறுகிறார். நேற்று பேட்டிங் செய்யும்போது ஆட்டத்தையும் வைபவ் சூரியவன்சியையும் ஜெய்ஸ்வால் சிறப்பான முறையில் வழி நடத்தினார்” என்று கூறியிருக்கிறார்.






