வீடியோ: வார்னர் விக்கெட்டை கட்டம்கட்டி தூக்கிய அஸ்வின்; வேறுவழியில்லாமல் சிரித்தபடி வெளியேறிய வார்னர்!

0
1933

சிறப்பாக திட்டமிட்டு வார்னர் விக்கெட்டை எடுத்துள்ளார் அஸ்வின். வீடியோ கீழே உள்ளது.

பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் நாக்பூர் மைதானத்தில் விளையாடி வருகிறது. முதல் இன்னிங்ஸில் பேட்டிங் செய்து 177 ரன்களுக்கு ஆஸ்திரேலிய அணி ஆல் அவுட் ஆனது.

- Advertisement -

அதைத் தொடர்ந்து பேட்டிங் செய்த இந்திய அணிக்கு கேப்டன் ரோகித் சர்மா 120 ரன்கள் அடித்தார். அதன்பிறகு மற்ற டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் குறைந்த ரன்களுக்கு ஆட்டம் இழக்க, ஆல்ரவுண்டர்கள் ஜடேஜா 70 ரன்களும், அக்சர் பட்டேல் 84 ரன்கள் அடித்தனர்.

இதனால் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 400 ரன்கள் எட்ட முடிந்தது. ஆஸ்திரேலியா அணிக்கு அபாரமாக பந்த வீசிய அறிமுக வீரர் டாட் மர்பி 7 விக்கெட்டுகளை கைப்பற்றி பிரமிக்க வைத்தார். இந்திய அணி 223 ரன்கள் முன்னிலை பெற்று வலுவான நிலையில் இருக்கிறது.

பின்தங்கிய நிலையில் முதல் இன்னிங்சை தொடர்ந்த ஆஸ்திரேலிய அணிக்கு துவக்க வீரர் கவாஜா அஸ்வின் சூழலில் ஆட்டம் இழந்தார். அதன் பிறகு மார்னஸ் லபுஜானே மீண்டும் ஒருமுறை ஜடேஜாவின் பந்தில் அவுட் ஆனார்.

- Advertisement -

சற்று நிலைத்து ஆடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட டேவிட் வார்னர் கேட்சை முதலில் விராட் கோலி தவற விட்டார். இதை பயன்படுத்தி பெரிய ஸ்கோர் அடிப்பாரா? என்று எதிர்பார்க்கப்பட்ட போது தொடர்ந்து தடுப்பாட்டம் ஆடி வந்த அவர் அஸ்வினின் சூழலில் எல்பிடபிள்யு ஆகி வெளியேறினார்.

இதுவரை 16 இன்னிங்சில் வார்னரை எதிர்கொண்டு 11 முறை அவுட் செய்துள்ளார் ரவிச்சந்திரன் அஸ்வின். இம்முறையும் அவரது திட்டம் சிறப்பாக எடுபட்டிருக்கிறது. வார்னரின் விக்கெட்டை வீழ்த்திய வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது. அதை கீழே பார்ப்போம்.

வீடியோ: