இந்திய வீராங்கனைகளை நக்கலடித்த இங்கிலாந்து வீரர்கள் ; பதிலடி தந்த அஷ்வின்!

0
4306
Ashwin

இந்தியப் பெண்கள் கிரிக்கெட் அணிக்காக 20 ஆண்டுகளாக ஒரு வேகப்பந்து வீச்சாளராக பங்களிப்பு செய்து வந்த ஜூலன் கோஸ்வாமி, நேற்று லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் இங்கிலாந்து அணிக்கு எதிராக தனது கடைசி சர்வதேச போட்டியை விளையாடி விட்டு ஓய்வு பெற்றுக்கொண்டார்.

இவரின் சர்வதேச கிரிக்கெட் போட்டி இன்று சமூக வலைத்தளத்தில் கிரிக்கெட் உலகத்தில் மிகப் பெரிய விவாத பொருளாக மாறியிருக்கிறது. ஏனென்றால் இந்திய அணி நிர்ணயித்த குறைந்த இலக்கை நோக்கி விளையாடிய இங்கிலாந்து அணி, 9 விக்கெட்டுகளை வெகு வேகமாக இழந்து விட்டது. ஆனால் கடைசி விக்கெட்டுக்கு விளையாடிய இங்கிலாந்து அணியின் சார்லி டீன் மிகச் சிறப்பாக விளையாடி இங்கிலாந்து அணியை வெற்றியை நோக்கி நகர்த்திக்கொண்டு வந்தார். வெற்றிக்கு 16 ரன்கள் தேவை எனும் பொழுது பந்து வீசிய இந்திய வீராங்கனை தீப்தி சர்மா, சார்லி டீன் பந்தை வீசி முடிக்குமுன் கிரீஸை விட்டு அவர் வெளியேறுவதைக் கவனித்து அவரை ரன் அவுட் செய்தார். இந்திய அணி வெற்றி பெற்றது.

- Advertisement -

தற்பொழுது இதுதான் இங்கிலாந்து வீரர்கள் இடையே மிகப்பெரிய கொந்தளிப்பையும் விவாதத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது. இங்கிலாந்து அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் சாம் பில்லிங்ஸ் ட்விட் செய்யும் போது, நிச்சயமாக இந்த விளையாட்டு விளையாடிய ஒருவர் இதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று நினைக்கவில்லையா? என்று ட்வீட் செய்தார். இதில் சேர்ந்து கொண்ட இங்கிலாந்து அணியின் பிரபல வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் ” பந்துவீச்சாளர் இடம் பந்துவீசும் நோக்கமே கிடையாது” என்று கூறினார். இதற்கு பதிலளித்த சாம் பில்லிங்ஸ் ” இப்படி செய்வதாக இருந்தால் நீங்கள் எத்தனை விக்கெட்டுகளை வீழ்த்துவீர்கள்” என்று மறு ட்விட் செய்தார். மேலும் இப்படி நடந்துகொண்ட இந்திய வீராங்கனைக்கு தைரிய விருது வழங்க வேண்டும் என்று நக்கலாக கூறினார்.

இவர்களின் இந்த ட்வீட்டை பார்த்த இந்தியாவின் ரவிச்சந்திரன் அஸ்வின் அதற்கு தகுந்த பதிலடியை பதிவு செய்து இருக்கிறார். இவர்களின் கருத்துக்கு மறு ட்விட் செய்த ரவிச்சந்திரன் அஸ்வின், அழுத்தம் மிகுந்த நெருக்கடியான நேரத்தில் மூளையை பயன்படுத்தி சரியான முடிவை எடுத்து இதை செயல்படுத்த இந்திய வீராங்கனைக்கு விருது தரவேண்டும் என்று கருத்திட்டு இங்கிலாந்து வீரர்களுக்கு பதிலடி தந்தார். தற்போது இந்த விவகாரம் கிரிக்கெட் உலகத்தில் பற்றி எரிந்து கொண்டிருக்கிறது. அதேசமயத்தில் இப்படியான ஆட்டம் இழப்பு முறையை ரன் அவுட் என்று பெயர் திருத்தி சரி என்று சமீபத்தில் அங்கீகரிக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.