லெஜெண்ட் கபில்தேவ் ரெக்கார்டை காலி பண்ணிய அஸ்வின்… புதிய ரெக்கார்ட்!

0
1885

இந்தியாவிற்காக அதிக விக்கெட் வீழ்த்தியவர்கள் பட்டியலில் கபில் தேவ்-ஐ பின்னுக்குத் தள்ளி மூன்றாவது இடத்திற்கு முன்னேறி உள்ளார் ரவிச்சந்திரன் அஸ்வின்.

இந்தூர் மைதானத்தில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. இரு அணிகளும் முதல் இன்னிங்சில் விளையாடி முடித்துவிட்டன.

- Advertisement -

இந்திய அணி 109 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அதன் பிறகு முதல் இன்னிங்சில் விளையாடிய ஆஸ்திரேலியா அணி 197 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் 88 ரன்கள் முன்னிலை பெற்றது.

முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலிய அணியின் அலெக்ஸ் கேரி விக்கெட்டை வீழ்த்தியபோது ரவிச்சந்திரன் அஸ்வின் புதிய மைல்கல்லை எட்டினார். இந்திய அணிக்காக அஸ்வின் வீழ்த்தும் 688 வது விக்கெட் இதுவாகும்.

இதன் மூலம் லெஜெண்ட் கபில்தேவ்-ஐ பின்னுக்குத்தள்ளி இந்திய அணிக்காக அனைத்து வித போட்டிகளிலும் அதிக விக்கெட் வீழ்த்தியவர்கள் பட்டியலில் மூன்றாவது இடத்திற்கு முன்னேறியுள்ளார் ரவிச்சந்திரன் அஸ்வின்.

- Advertisement -

அஸ்வின், 171 டெஸ்ட் இன்னிங்சில் 466 விக்கெட்டுகள் எடுத்துள்ளார். ஒருநாள் போட்டிகளில் 151 விக்கெட்டுகள், 65 டி20 போட்டிகளில் 72 விக்கெட்டுகள் என மொத்தம் 688 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார். இந்த பட்டியலில் அனில் கும்ப்ளே முதல் இடத்திலும், ஹர்பஜன் சிங் 2ம் இடத்திலும் உள்ளனர்.

இந்திய அணிக்காக அதிக விக்கெட் வீழ்த்தியவர்கள் பட்டியல்(அனைத்துவித போட்டிகளில்)

  1. 953 (499) – அனில் கும்ப்ளே
  2. 707 (442) – ஹர்பஜன் சிங்
  3. 688* (347) – ரவிச்சந்திரன் அஸ்வின்
  4. 687 (448) – கபில் தேவ்
  5. 597 (373) – ஜாகீர் கான்

நேற்றைய தினம் டெஸ்ட் கிரிக்கெட்டின் பவுலர்கள் தரவரிசையில் கிட்டத்தட்ட எட்டு வருடங்களுக்கு பிறகு, நம்பர் ஒன் இடத்தை பிடித்தார் ரவிச்சந்திரன் அஸ்வின். இவர் 864 புள்ளிகளுடன் இருக்கிறார். முதல் இடத்தில் இருந்த ஜேம்ஸ் ஆண்டர்சன் நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் பின்னடைவை சந்தித்து 859 புள்ளிகளை பெற்று இரண்டாவது இடத்திற்கு நகர்ந்துள்ளார்.

மூன்றாவது இடத்தில் ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் இருக்கிறார். நான்காவது இடத்தில் ஜஸ்பிரித் பும்ரா இருக்கிறார். எட்டாவது இடத்தில் ரவீந்திர ஜடேஜா இருப்பது குறிப்பிடத்தக்கது.