“அஷ்வின் இப்படி பண்ணி இருக்க கூடாது.. அவருக்கு இதைவிட நல்ல வாய்ப்பு கிடைக்காது!” – இந்திய முன்னாள் வீரர் விமர்சனம்!

0
4119
Ashwin

இந்திய அணி நேற்று ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான உலகக் கோப்பை தொடரின் போட்டியில் மூன்று சுழற் பந்துவீச்சாளர்களை கொண்டு வந்து அசத்தியது.

நேற்றைய போட்டியில் இந்திய அணியில் ரவிச்சந்திரன் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா மற்றும் குல்தீப் யாதவ் என மூன்று உலக தரமான சுழற் பந்துவீச்சாளர்கள் இந்திய விளையாடும் அணியில் இடம் பெற்றார்கள்.

- Advertisement -

இந்த மூன்று சுழற் பந்துவீச்சாளர்களும் சேர்ந்து ஆறு ஆஸ்திரேலிய முக்கிய விக்கெட்டை கைப்பற்றினார்கள். மேலும் மிகவும் பந்துவீச்சில் சிக்கனமாகவும் இருந்தார்கள்.

சென்னை சேப்பாக்கம் ஆடுகளத்தில் இப்படியான உலகத்தரமான சுழற் பந்துவீச்சாளர்களை எதிர்த்து விளையாட ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்களால் முடியவில்லை. அவர்களும் முடிந்தவரை சமாளித்து ரன்கள் எடுத்தார்கள். ஆனால் ஜடேஜா நடுவில் வந்து அப்படியே சரித்து விட்டார்.

இதுகுறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா கூறும் பொழுது ” முதலில் இந்தியா மூன்று சுழற் பந்துவீச்சாளர்களை முடிவு செய்தது. ஜடேஜா இந்த சூழ்நிலையில் சர் ஜடேஜா ஆவார். நீங்கள் அவரை விளையாடவே முடியாது. ஏனென்றால் அவர் காற்றில் வேகமாக வீசுகிறார். பிளாட் ஆகவும் வீசுகிறார். சில பந்துகள் ஆடுகளத்தில் பட்டபின் மாறுகின்றன.

- Advertisement -

உங்களால் அவருக்கு எதிராக இப்படியான ஆடுகளத்தில் அதிரடியாகவோ அல்லது ஸ்வீப் ஆடவோ முடியாது. ஜடேஜாவை இந்த ஆடுகளத்தில் ஆடுவது கிட்டத்தட்ட சாத்தியமற்றது. ரன்கள் எடுப்பது மிகவும் சிரமம். அவர் அதை சிறப்பாக செய்து காட்டினார்.

குல்தீப் யாதவ் இரண்டு பெரிய விக்கெட்டுகளை எடுத்தார். அவர் பந்துக்கு கொஞ்சம் பிளைட் கொடுத்து எந்த விக்கெட்டிலும் விக்கெட் எடுக்கிறார். அவர் அப்படியான ஒரு பந்துவீச்சாளர். அவர் உங்களுடைய மேட்ச் வின்னர். அவர் உங்கள் விளையாட்டை மாற்றக்கூடியவர். உலகக் கோப்பை முடிவின்போது இந்திய அணிக்காக அதிக விக்கெட் எடுத்தவராக இருப்பார்.

ரவிச்சந்திரன் அஸ்வின் சற்று டைட்டாக பந்து வீசினார். இந்தக் கேள்வி நிச்சயம் இருக்கும். இந்த ஆடுகளத்தில் உங்களுக்கு டைட்டான பந்துவீச்சு தேவையில்லை. அந்த நேரத்தில் இரண்டு மூன்று விக்கெட்டுகளை தேடிக்கொண்டிருந்தீர்கள். ஆனால் அவரோ சிக்கனமாக மட்டும் இருந்தார். இப்படியான ஒரு ஆடுகளம் மீண்டும் அஸ்வினுக்கு கிடைக்காமல் போகலாம். இது அவருக்கான ஒரு சிறந்த வாய்ப்பாக இருந்தது!” என்று கூறியிருக்கிறார்!