“ஆட்டநாயகன் விருதை அஷ்வினுக்குதான் தந்திருக்க வேண்டும்!” – தினேஷ் கார்த்திக் காரணங்களுடன் பரபரப்பு பேச்சு!

0
1204
DK

இந்திய ஆஸ்திரேலிய அணிகள் மோதும் நான்கு போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டி இரண்டரை நாட்கள் மட்டுமே நீடித்தது. இந்த இரண்டரை நாட்களில் ஆஸ்திரேலியா அணி இரண்டு நாட்கள் போட்டியில் மேலாதிக்கம் செலுத்தியது. ஆனால் மூன்றாவது நாள் துவக்கத்தில் செய்த தவறால் மொத்த ஆட்டத்தையும் தோற்று பரிதாபமாக தொடரை சமன் செய்யும் வாய்ப்பை இழந்தது!

டெல்லியில் நடைபெற்று முடிந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி திரும்ப வந்து பேட்டிங்கில்  மிகச் சிறப்பான முறையில் செயல்பட்டது. முதல் விக்கட்டுக்கு 50 ரன்கள் பார்ட்னர்ஷிப் கிடைத்தது. துவக்க ஆட்டக்காரர் உஸ்மான் கவஜா சிறந்த தாக்குதல் ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

- Advertisement -

இப்படியான நிலையில் ஒரே ஓவரில் உலகின் நம்பர் 1 மற்றும் நம்பர் 2 டெஸ்ட் பேட்ஸ்மேன்கள் லபுசேன் மற்றும் ஸ்மித்  இருவரையும் மூன்று பந்துகளில் வெளியேற்றி இந்திய அணிக்கு அற்புதமான திருப்புமுனையை ரவிச்சந்திரன் அஸ்வின் உருவாக்கினார் . அதேபோல் இந்திய அணி 139 ரன்களுக்கு ஆறு விக்கெட்டுகளை இழந்திருந்த பொழுது, அக்சர் பட்டேலுடன் இணைந்து 114 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து முக்கியமான 37 ரன்கள் எடுத்து அணியை சரிவிலிருந்து மீட்டார். முதல் இன்னிங்ஸில் மூன்று விகட்டுகள் மற்றும் இரண்டாவது இணையத்தில் மூன்று விக்கட்டுகள் வீழ்த்தினார். ஆனால் மொத்தமாக பத்து விக்கெட் வீழ்த்திய ரவீந்திர ஜடேஜாவுக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.

தற்பொழுது இது குறித்து பேசி உள்ள இந்திய அணி வீரர் தினேஷ் கார்த்திக்
” நான் ரவீந்திர ஜடேஜாவை எந்த குற்றமும் சொல்லவில்லை. ஆனால் ஆட்ட நாயகனுக்கான என் வாக்கு நிச்சயம் அஸ்வினுக்குதான். அவர் முதல் நாளில் மூன்று பந்துகளில் லபுசேன் மற்றும் ஸ்மித் இருவரையும் வீழ்த்தி  இந்திய அணிக்கு ஏற்படுத்தி தந்த திருப்புமுனை மிகவும் அற்புதமானது” என்று கூறினார்!

மேலும் தொடர்ந்து பேசிய அவர்
” மேலும் ஆஸ்திரேலியா அணி பந்து வீச்சில் இந்திய அணியை 139/6 என்று கட்டுப்படுத்தி வைத்திருந்த பொழுது, மிகவும் நெருக்கடியான நேரத்தில் அஸ்வின் மிகவும் சிறப்பான ரன் பங்களிப்பை தந்தார். அங்கிருந்து 114 ரன்கள் பார்ட்னர்ஷிப் ஏற்பட வழி வகுத்தார். எனவே என்னைப் பொருத்தவரை ரவிச்சந்திரன் அஸ்வின்தான் ஆட்ட நாயகன் விருதுக்கு இந்த போட்டிக்குச் சரியானவர். ஆனால் ஜடேஜா 10 விக்கெட்டுகளை கைப்பற்றுவது என்பது சராசரியான சாதனை அல்ல. இதனால் அவர் ஆட்டநாயக்கனுக்கான போட்டியில் மிகவும் நெருக்கமாக இருந்து வென்றார்!” என்று கூறியுள்ளார்!

- Advertisement -

தற்பொழுது 4 போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடரில் இந்திய அணி முதல் இரண்டு போட்டிகளை வென்று பலமான முன்னிலையை பெற்று உள்ளது. மிக முக்கியமான தொடரின் மூன்றாவது போட்டி இந்தூர் மைதானத்தில் மார்ச் ஒன்றாம் தேதி துவங்க இருக்கிறது!