83 ரன்னில் சுருண்ட வெஸ்ட் இண்டீஸ்.. கெத்தாக தொடரை கைப்பற்றிய நேபாள்.. வரலாற்றில் மாபெரும் சம்பவம்

0
75
WI

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் 90 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று நேபாள் அணி தொடரை கைப்பற்றியது. முதல் முறையாக டெஸ்ட் விளையாடும் நாட்டுக்கு எதிராக போட்டியை வென்றதுடன் தொடரையும் வென்று அசத்தியிருக்கிறது.

தற்போது வெஸ்ட் இண்டீஸ் இளம் அணி நேபாள் அணிகள் யுஏஇ சார்ஜாவில் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகின்றன. இந்த தொடரின் முதல் போட்டியில் வெற்றி பெற்றிருந்த நேபாள் அணி நேற்று இரண்டாவது போட்டியிலும் வென்று சாதனை படைத்திருக்கிறது.

- Advertisement -

பேட்டிங்கில் பட்டையை கிளப்பியது

இதைத்தொடர்ந்து இந்த போட்டியில் டாஸ் வென்ற நேபாள் அடி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. முதலில் பேட்டிங் செய்ய வந்த நேபாள் அணிக்கு விக்கெட் கீப்பர் ஆசிப் ஷேக் அபாரமாக விளையாடி அரை சதம் அடித்து 47 பந்துகளில் 8 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் உடன் 68 ரன்கள் குவித்தார்.

இவருக்கு அடுத்து மிடில் ஆர்டரில் வந்த சந்திப் ஜோரா சிறப்பாக விளையாடி அரைசதம் அடித்து 39 பந்துகளில் 3 பவுண்டரிகள் மற்றும் 5 சிக்ஸர்கள் உடன் 63 ரன்கள் விளாசி தள்ளினார். 20 ஓவர்கள் முடிவில் சிறப்பாக விளையாடிய நேபாள் அணி 6 விக்கெட் இழப்புக்கு 173 ரன்கள் குவித்தது.

- Advertisement -

வரலாற்று வெற்றி

இதைத் தொடர்ந்து விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணி யாரும் எதிர்பார்க்காத வகையில் வெறும் 83 ரன்கள் மட்டுமே எடுத்து 17.1 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆல் அவுட் ஆனது. இதைத்தொடர்ந்து நேபாள் அணி 90 ரன்கள் வித்தியாசத்தில் பிரம்மாண்ட வெற்றி பெற்றது.

இதையும் படிங்க : அடுத்த விராட் கோலி தான் திலக் வர்மா.. சும்மா சொல்லல இந்த ஒற்றுமையை பாருங்க – முகமது கைப் பேச்சு

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு அதிகபட்சமாக ஆல்ரவுண்டர் ஜேசன் ஹோல்டர் 21 ரன்கள் எடுத்தார். நேபாள் பந்துவீச்சில் முகமத் ஆதில் ஆலம் 4, குஷால் பர்டேல் 3 விக்கெட்டுகள் கைப்பற்றினார். டெஸ்ட் விளையாடும் ஒரு நாட்டுக்கு எதிராக சர்வதேச போட்டியை முதல் முறையாக வென்றதுடன், தற்போது தொடரையும் வென்று நேபாள் அணி வரலாற்று வெற்றியை அடைந்திருக்கிறது!

- Advertisement -