தோனி எனக்கு செய்த அந்த காரியத்திற்காக.. நான் வாழ்நாள் முழுவதும் நன்றியோடு இருப்பேன் – அஸ்வின் பேட்டி

0
140
Ashwin

இங்கிலாந்து அணிக்கு எதிராக இந்தியாவில் நடைபெற்று முடிந்திருக்கும் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ரவிச்சந்திரன் அஸ்வின் தனது சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் 500 ஆவது விக்கெட்டை கைப்பற்றினார். மேலும் ஐந்தாவது டெஸ்ட் போட்டி அவருக்கு சர்வதேச நூறாவது டெஸ்ட் போட்டியாகவும் அமைந்தது.

மேலும் இந்த டெஸ்ட் தொடரில் குறைந்த டெஸ்ட் போட்டிகளில் 500 விக்கெட்டுகள் கைப்பற்றிய இரண்டாவது பந்துவீச்சாளர், அதிக முறை ஒரு இன்னிங்ஸில் ஐந்து விக்கெட் கைப்பற்றிய இந்திய பந்துவீச்சாளர், நூறாவது டெஸ்ட் போட்டியில் சிறந்த பந்துவீச்சை வெளிப்படுத்தியவர் என பல சாதனைகளை படைத்திருந்தார்.

- Advertisement -

ரவிச்சந்திரன் அஸ்வின் நூறாவது டெஸ்ட் போட்டியில் பங்கேற்றதற்கு நினைவாக, இந்திய கேப்டன் ரோகித் சர்மா அவருக்கு சிறந்த முறையில் மரியாதை அளித்திருந்தார். மேலும் இந்திய கிரிக்கெட் நிர்வாகத்தின் சார்பில் அவருக்கு தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் நினைவு பரிசு வழங்கியிருந்தார்.

தற்போது டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு வங்கி வரும் ரசிகர்களின் ஆதரவுக்கு இடையே, எதிர்காலத்தில் எந்த வீரர்களாவது 100 டெஸ்ட் விளையாடுவார்களா? எந்த பந்துவீச்சாளர்கள் ஆவது 500 விக்கெட் கைப்பற்றுவார்களா? என்று பார்க்கும் பொழுது அதற்கான வாய்ப்புகள் மிக குறைவாக தான் இருக்கிறது. மேலும் இந்தியா ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளை தவிர மற்ற அணிகள் அதிக டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவதும் இல்லை.

இந்த நிலையில் மகத்தான சாதனை படைத்திருக்கும் தமிழகத்தைச் சேர்ந்த ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு, தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் இன்று பாராட்டு விழா நடத்தியது. இந்த பாராட்டு விழாவில் அவருக்கு 500 விக்கெட்டுகள் கைப்பற்றியதை சிறப்பிக்கும் விதமாக 500 தங்க காசுகள் கொடுக்கப்பட்டது. மேலும் இந்த நிகழ்ச்சியில் அனில் கும்ப்ளே கலந்து கொண்டார்.

- Advertisement -

பாராட்டு விழாவில் ரவிச்சந்திரன் அஸ்வின் பேசும்பொழுது ” என்னுடைய கேப்டன் மகேந்திர சிங் தோனி எனக்கு கொடுத்த வாய்ப்புகளுக்காக நான் காலம் முழுவதும் அவருக்கு நன்றி உடன் இருப்பேன். தோனிதான் என்னை கிரீஸ் கெயிலுக்கு எதிராக ஆட்டத்தின் முதல் ஓவரை வீச வைத்தார்.

இதையும் படிங்க : யார் போனா என்ன.. குஜராத் டைட்டன்ஸ்க்கு இந்த தமிழ்நாட்டு பையன் மெயின் ரோல் பண்ணுவார் – நெக்ரா பேட்டி

2013 ஆம் ஆண்டு ஒரு தொடரில் என்னை இந்திய அணியில் இருந்து டிராப் செய்ய நினைத்திருந்தார்கள். அப்போது தோனிதான் அஸ்வின் இதற்கு முன் தொடரில் மிகச் சிறப்பாக விளையாடியிருக்கிறார், எனவே அவர் இந்தத் தொடரிலும் இருக்க வேண்டும் எனக் கூறி வாய்ப்பை நீட்டித்தது தந்தார். அவர் எனக்காக அவரால் முடிந்த அளவு ஆதரவை கொடுத்தார்” என்று உணர்ச்சிப்பூர்வமாக பேசியிருக்கிறார்.