நான் நியூசிலாந்து டீம் மீட்டிங்கில் கலந்துக்க பணம் கொடுக்க தயார்.. வேற மாதிரி பண்றாங்க – அஸ்வின் பேச்சு

0
48
Ashwin

இந்திய அணிகள் முன்னாள் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் தான் நியூசிலாந்து அணி கூட்டங்களில் கலந்து கொள்வதற்கு பணம் கொடுக்க தயார் என்று கூறியிருக்கிறார்.

இந்திய அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் திடீரென மெதுவான பந்துகளை வீச ஆரம்பித்து போட்டிக்குள் நுழைந்து, இறுதிவரை விட்டுக் கொடுக்காமல் நியூசிலாந்து அணி அசத்தியது. இதுகுறித்து ரவிச்சந்திரன் அஸ்வின் பாராட்டி இருக்கிறார்.

- Advertisement -

பணம் கொடுத்து கலந்து கொள்வேன்

இந்த முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி வெகு எளிதாக வெல்லும் நிலையில் இருந்தது. விராட் கோலி மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் இருவரும் செட்டில் ஆகி களத்தில் நின்றார்கள். இப்படியான நேரத்தில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை கைப்பற்றி ஆட்டத்திற்குள் வந்து நியூசிலாந்து அணி அமர்க்களப்படுத்தியது.

இதுகுறித்து ரவிச்சந்திரன் அஸ்வின் கூறும்போது “பல முன்னணி அணிகள் பகுப்பாய்வு செய்து அதன் வழி விளையாடுவது கிடையாது. ஆனால் நியூசிலாந்து அணி முழுக்க முழுக்க பகுப்பாய்வின் அடிப்படையில் செயல்படுகிறது. நான் அவர்களுடைய அணி கூட்டத்தில் கலந்து கொண்டு அவர்கள் எவ்வாறு திட்டமிட்டு செயல்படுகிறார்கள் என்று பார்க்க விரும்புகிறேன். இதற்காக நான் பணம் கொடுக்கவும் தயாராக இருக்கிறேன்”

- Advertisement -

இதைப் பாராட்ட வேண்டும்

“முதல் ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து அணி விட்டுக் கொடுக்காமல் இறுதி வரையில் போராடியதற்காக நாம் அவர்களை பாராட்ட வேண்டும். அந்த அணியில் பெரிய அளவுக்கு பலம் இல்லை என நான் கருத்து தெரிவித்திருந்தேன். ஆனால் அவர்களின் ஆட்ட ஒழுக்கம், பீல்டிங் மற்றும் வியூகத்திற்கு தகுந்த வகையில் செயல்படுவது மூலம் பெரிய அணிகளுக்கு எதிராக சிறந்த போட்டியை கொடுக்கிறார்கள்”

இதையும் படிங்க : நியூசி 2வது ODI.. உத்தேச இந்திய பிளேயிங் லெவன்.. கட்டாய 2 மாற்றங்கள்.. தொடரை வெல்லுமா இந்திய அணி?

“வெளிப்படையாக சொன்னால் இந்தியா சிறந்த கிரிக்கெட்டை விளையாடவில்லை. ஆனால் நியூசிலாந்து அணி சிறந்த கிரிக்கெட் விளையாடி சுவாரசியமாக ஆட்டத்தை வைத்தது. இந்திய அணி தரப்பில் ஹர்ஷித்ராணா சிறப்பாக பந்துவீச்சு மற்றும் பேட்டிங் செய்த இடங்கள் மட்டுமே இருந்தது” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -