நியூசி 2வது ODI.. உத்தேச இந்திய பிளேயிங் லெவன்.. கட்டாய 2 மாற்றங்கள்.. தொடரை வெல்லுமா இந்திய அணி?

0
9
ICT

இந்தியா நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி ராஜ்கோட் மைதானத்தில் நாளை நடைபெறுகிறது. இந்த போட்டிக்கு இந்திய பிளேயிங் லெவன் எவ்வாறு அமையலாம்? என்று பார்க்கலாம்.

இந்தத் தொடரில் நேற்று முன்தினம் நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி நான்கு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் முன்னிலை வகிக்கிறது. எனவே நாளைய போட்டியை வென்றால் தொடரை வென்று விடும் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

வாஷிங்டன் சுந்தர் வெளியேற்றம்

முதல் போட்டியில் விலா எலும்பு பகுதியில் காயமடைந்த வாஷிங்டன் சுந்தர் தொடரை விட்டு வெளியேறி இருக்கிறார். இவருடைய இடத்திற்கு ஆச்சரியப்படும் விதமாக டெல்லி மாநில அணிக்காகவும் ஐபிஎல் தொடரில் லக்னோ அணிக்காகவும் விளையாடும் ஆயுஷ் பதோனி சேர்க்கப்பட்டிருக்கிறார்.

அதே சமயத்தில் இவருக்கு எடுத்ததும் வாய்ப்பு இந்திய பிளேயிங் லெவனி ல் கிடைப்பது மிகவும் கடினமான ஒன்று. இந்திய அணி நிர்வாகம் 5 பவுலர்களுடன் செல்லுமா? இல்லை ஆறாவது பவுலரை வைத்துக்கொண்டு செல்லுமா என்பதை பொறுத்து பிளேயிங் லெவன் அமையும்.

- Advertisement -

இரண்டு மாற்றங்கள்

இப்போதைக்கு வாஷிங்டன் சுந்தர் இடத்திற்கு மிதவேக பந்துவீச்சு ஆல் ரவுண்டர் நிதிஷ் குமார் ரெட்டி விளையாடுவதற்கான வாய்ப்புகள் மிக அதிகமாக இருக்கிறது. அதே சமயத்தில் பிரசித் கிருஷ்ணா இடத்திற்கு அர்ஸ்தீப் சிங்கை விளையாட வைக்க மாட்டார்கள் என்று கிரிக்கெட் வல்லுனர்கள் கூறுகிறார்கள். எனவே ஒரு மாற்றம் உறுதியாக நடைபெறும்.

இதையும் படிங்க : கம்பீர் செஞ்சது ரொம்ப தப்பு.. கில்லுக்கு கொடுக்கும் பாதுகாப்பு ஏன் சுந்தருக்கு கொடுக்கல.. முகமது கைப் விமர்சனம்

இந்திய பிளேயிங் லெவன் :

ரோஹித் சர்மா, கேப்டன் கில், விராட் கோலி, ஸ்ரேயாஸ், கேஎல்ராகுல், ரவீந்திர ஜடேஜா, நிதீஷ் குமார் ரெட்டி, ஹர்ஷித் ரானா, குல்தீப் யாதவ், முகமது சிராஜ் மற்றும் பிரசித் கிருஷ்ணா.

- Advertisement -