தியாகம் செய்த குர்னல் பாண்டியா.. கேள்வி கேட்டு விவாதத்தை கிளப்பிய அஸ்வின்

0
1222

ஐபிஎல் கிரிக்கெட் தொடர் மும்பை அணிக்கு எதிரான ஆட்டத்தில் லக்னோ அணி ஐந்து ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் லக்னோ அணி 15 புள்ளிகள் பெற்றுள்ளது.

இதன் மூலம் மும்பை அணியால் 16 புள்ளிகளை தான் பெற முடியும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.  நேற்றைய ஆட்டத்தில் மார்க் ஸ்டோனிஸ் அதிரடியாக விளையாடி  ரன்களை சேர்த்தார். 47 பந்துகளில் 89 ரன்கள் விளாசிய அவர் 8 சிக்ஸர்களையும் நான்கு பவுண்டர்களையும் அடித்துள்ளார்.

- Advertisement -

இந்த நிலையில் ஸ்டோனிஸ்க்கு பக்கபலமாக நின்ற கேப்டன் குர்னல் பாண்டியா 42 பந்துகளை எதிர்கொண்டு 49 ரன்கள் சேர்த்தார். ஆனால் ஆடுகளம் தோய்வாக இருந்ததால் குர்னல் பாண்டியாவால் ரன்கள் சேர்க்க முடியவில்லை. இதனால் குர்னல் பாண்டியா தம் அரைசதம் எடுப்பதை கூட யோசிக்காமல் மற்ற பேட்ஸ்மேனாவது  அதிரடியாக விளையாட வேண்டும் என முடிவெடுத்து தான் காயம் அடைந்து விட்டதாக கூறி வெளியேறினார்.

குர்னல் பாண்டியாவின் இந்த முடிவு ரசிகர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது. இந்த நிலையில் தமிழக கிரிக்கெட் வீரர் அஸ்வின் இந்த சம்பவத்தை சுட்டிக்காட்டி இது ரிட்டயர்டு ஹர்ட்டா இல்லை ரிட்டையர்டு அவுட்டா என கேள்வி கேட்டுள்ளார். ஆட்டமிழக்காமல் தமக்கு காயம் ஏற்பட்டு விட்டது என்று விளையாட முடியவில்லை எனக் கூறி களத்திலிருந்து வெளியேறலாம்.

பெரும்பாலும் அனைத்து வீரர்களும் இப்படித்தான் செய்வார்கள். ஆனால் அஸ்வின் முதல்முறையாக கடந்த ஆண்டு  அதிரடியாக விளையாட முடியவில்லை என்று கூறி மற்ற வீரருக்கு வாய்ப்பு வழங்கும் விதமாக ஆட்டம் இழக்காமலே களத்தில் இருந்து வெளியேறினார். தற்போது அஸ்வினுக்கு பிறகு அதே யுத்தியை குர்னல் பாண்டியா செய்திருக்கிறார்.

- Advertisement -

ஆனால் இவ்வாறு செய்தால் அது ரிட்டயர்டு அவுட் ஆக வழங்க வேண்டும் என பொருள்படும் வகையில் அஸ்வின் தற்போது பேசியிருப்பது ரசிகர்களை கடுப்படைய செய்துள்ளது. உங்களுக்கு வந்தா ஒட்டு ரத்தம் மற்றவர்களுக்கு வந்த தக்காளி சட்னியா என்று அஸ்வினை ரசிகர்கள் கேள்வி கேட்டு வருகின்றனர்.