INDvsSA.. டிராவிட்டின் தவறான முடிவு.. பறிபோன அஸ்வின் விக்கெட்.. தலைகீழாக மாறிய போட்டி.!

0
13434

இந்தியா – தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி செஞ்சுரியனில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 245 ரன்கள் எடுத்து ஆல் அவுட்டாகியது. இதையடுத்து களமிறங்கிய தென்னாப்பிரிக்கா அணி 2ஆம் நாள் ஆட்ட நேர முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 256 ரன்கள் சேர்த்திருந்தது.

ஏற்கனவே 11 ரன்கள் முன்னிலையுடன் தென்னாப்பிரிக்கா அணி களமிறங்கிய நிலையில், மூன்றாம் நாளில் இந்திய அணி விரைவாக விக்கெட்டுகள் வீழ்த்த வேண்டிய கட்டாயத்தில் இருந்தது. ஆனால் களத்தில் இருந்த டீன் எல்கர் – மார்கோ யான்சன் இருவரும் அவ்வளவு எளிதாக விக்கெட்டை விட்டுக் கொடுப்பதாக தெரியவில்லை.

- Advertisement -

இந்திய அணியின் பும்ரா, சிராஜ், ஷர்துல் தாக்கூர், பிரசித் கிருஷ்ணா உள்ளிட்ட எந்த வீரர் பந்துவீசினாலும் ரன்கள் சேர்க்கப்பட்டு கொண்டே இருந்தது. டீன் எல்கர் 150 ரன்களை கடந்து அசாத்திய இன்னிங்ஸை ஆட, இன்னொரு பக்கம் ஆல்ரவுண்டரான மார்கோ யான்சன் அதிரடியாக சில பவுண்டரிகளை விளாசினார்.

அவர் 25 ரன்களை எட்டியிருந்த நிலையில், இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா அஸ்வினை அட்டாக்கில் கொண்டு வந்தார். அப்போது பிட்சில் கொஞ்சம் ஸ்பின் ஏற்பட, அதனை சரியாக புரிந்து அஸ்வின் பேட்ஸ்மேன்களுக்கு தொல்லை கொடுக்க தொடங்கினார். இந்த நிலையில் 78வது ஓவரில் அஸ்வின் வீசிய ஒரு பந்து யான்சன் பேட்டில் பட்டு கேட்சிற்கு பறந்தது.

ஆனால் அதனை கேஎல் ராகுலும் பிடிக்கவில்லை, ஸ்லிப் திசையில் நின்றிருந்த சுப்மன் கில்லும் பிடிக்கவில்லை. ஏற்கனவே ஆட்டம் கையை விட்டு விலகி சென்ற நிலையில், கைக்கு வந்த கேட்சையும் விக்கெட் கீப்பராக உள்ள கேஎல் ராகுல் பிடிக்காமல் விட்டது அஸ்வினை விரக்தியடைய செய்தது. இதனால் இந்திய அணி ரசிகர்களும் சோகமடைந்தனர்.

- Advertisement -

ஏற்கனவே ஒரு பேட்ஸ்மேனுக்காக டெஸ்ட் கிரிக்கெட்டில் கேஎல் ராகுலை விக்கெட் கீப்பராக சோதிப்பதை முன்னாள் வீரர் பார்த்தீவ் படேல் எதிர்த்திருந்தார். அதற்கேற்ப கேஎல் ராகுல் கைக்கு வரும் கேட்சையும் தவறவிட்டுள்ளார். இதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் முழுமையான விக்கெட் கீப்பரோடு இந்திய அணி களமிறங்கியிருக்க வேண்டும் என்று ரசிகர்கள் புலம்பி வருகின்றனர்.

அதேபோல் பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டின் முடிவு தவறானது என்றும் பார்க்கப்படுகிறது. அவர் சிறப்பாக பேட்டிங் செய்திருந்தாலும், விக்கெட் கீப்பராக கேஎல் ராகுல் சொதப்பலான ஆடியிருப்பது இந்திய அணிக்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.