அக்சர் படேல் ஸ்டார் இந்திய வீரருக்கு செஞ்சது நியாயமே இல்லை.. தலைய சொரிய வச்சுட்டாரு – ஆரோன் பின்ச் விமர்சனம்

0
6
Finch

நேற்று ஹைதராபாத் அணிக்கு எதிராக டெல்லி அணியின் கேப்டன் அக்சர் படையில் செயல்பட்ட விதம் குறித்து ஆஸ்திரேலியா முன்னாள் கேப்டன் ஆரோன் பின்ச் விமர்சனம் செய்திருக்கிறார்.

இந்த போட்டியில் அக்சர் படேல் மற்றும் குல்தீப் யாதவ் இருவரும் சேர்ந்து மொத்தம் நான்கு ஓவர்கள் மட்டுமே பந்து வீசியிருந்தார்கள். ஆனால் பகுதி நேர ஆப் ஸ்பின்னர் நிதிஷ் ரானா 4 ஓவர்களையும் வீசி இருந்தார். மேலும் நிறைய ரன்கள் விட்டுக் கொடுத்திருந்தார்.

- Advertisement -

ரவிச்சந்திரன் அஸ்வின் விமர்சனம்

உங்களுடைய சிறந்த பவுலர்களுக்கு ஒரு நாள் கெட்டதாக இருந்தாலும், அவர்களுக்கு நான்கு ஓவர்களையும் கொடுங்கள் என்று ரவிச்சந்திரன் அஸ்வின் தொடர்ந்து கூறி வருகிறார். பேட்ஸ்மேன்கள் டக் அவுட் ஆனாலும் அடுத்து அவர்களை விளையாட வைப்பது போல, பவுலர்களுக்கும் வாய்ப்புகள் கொடுக்க வேண்டும் என்று கூறி வருகிறார்.

இந்த நிலையில் இந்தியாவின் சிறந்த மணிக்கட்டு சுழல் பந்துவீச்சாளரான குல்தீப் யாதவ் நான்கு ஓவர்களும் நேற்று பந்து வீசி இருந்தால் அபிஷேக் சர்மாவை அவுட் செய்வதற்கு ஒரு வாய்ப்பு இருந்திருக்கும். அவரிடம் நிறைய வேரியேஷன் இருக்கிறது. ஆனால் எதுவுமே இல்லாத நிதிஷ் ராணாவை அக்சர் படேல் பந்து வீச வைத்தது பிரச்சினையாக மாறி உள்ளது.

- Advertisement -

தலையை சொரிய வைத்து விட்டார்

இதுகுறித்து பேசி உள்ள ஆரோன் பின்ச் கூறும்போது ” நாம் இப்பொழுது தலையை சொரிந்து கொண்டுதான் இருக்கிறோம் இல்லையா? அக்சர் படேல் இரண்டு ஓவர்களுக்கு 23 ரன் ஒரு விக்கெட். குல்தீப் இரண்டு ஓவர்களுக்கு 30 ரன் கொடுத்திருக்க, நிதிஷ் ராணா நான்கு ஓவர்களையும் வீசி இருக்கிறார். எனக்கு இது அர்த்தம் மற்றதாக தெரிகிறது”

இதையும் படிங்க : எங்க டீம்ல விட்டா எல்லாரும் அடிக்கதான் பார்ப்பாங்க.. ஆனா கேப்டனா என்னுடைய பிளான் இதுதான் – இஷான் கிஷான் பேச்சு

“குல்தீப் இரண்டு டி20 உலகக் கோப்பைகளை வென்ற நட்சத்திர ஸ்பின்னர். நீங்கள் அங்கு செய்ய வேண்டியது ரன் இல்லாமல் இரண்டு மூன்று பந்துகள் வீசினால், அபிஷேக் ஷர்மாவே ஏதாவது செய்து ஆட்டம் இழப்பார். குல்தீப் யாதவிடம் நல்ல வேரியேஷன் இருக்கிறது. அவர் மாற்றி மாற்றி வீச முடியும். இப்படி இருக்கும்போது அவர்தானே வீச வேண்டும். மேலும் நீங்கள் உங்களுக்கான வாய்ப்பு முடிந்து விட்டது நன்றி என்று சொன்னது போல இருக்கிறது” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -