நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட்டின் 3ஆம் நாள் ஆட்டம் – நடுவர் நிதின் மேனனை தனது பாணியில் கலாய்த்த ரவிச்சந்திரன் அஸ்வின்

0
183
Ashwin vs Nithin Menon

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி தற்போது விறுவிறுப்பை எட்டியுள்ளது. டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. சுமார் 100 ஓவர்களுக்கு மேல் இந்திய அணி பேட்டிங் செய்து 10 விக்கெட் இழப்பிற்கு 345 ரன்கள் குவித்தது. இந்திய அணியில் அதிகபட்சமாக ஸ்ரேயாஸ் ஐயர் தனது முதல் டெஸ்ட் போட்டியிலேயே 105 ரன்கள் குவித்து சதம் அடித்தார். அவரைத் தொடர்ந்து சுப்மன் கில் மற்றும் ரவீந்திர ஜடேஜா அரை சதம் அடித்து அசத்தினர்.

இந்திய அணி முதல் இன்னிங்ஸில் விளையாடி முடித்ததும் நியூசிலாந்து அணி தற்போது அதனுடைய முதல் இன்னிங்ஸில் விளையாடி வருகிறது. எஸ்வந்த் அணியின் துவக்க வீரர்கள் லதம் மற்றும் வில் யங் நிதானமாக விளையாடி மிக சிறந்த துவக்கத்தை நியூசிலாந்து எனக்கு ஏற்படுத்திக் கொடுத்து இருக்கின்றனர். தற்பொழுது நியூசிலாந்து அணி 4 விக்கெட் இழப்புக்கு 218 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது

- Advertisement -

நடுவர் நிதின் மேனன் எடுத்த தவறான முடிவு

வில் யங் 89 எடுத்திருந்த நிலையில் ரவிச்சந்திரன் அஸ்வின் மிக அற்புதமாக பந்துவீசி அவரது விக்கெட்டை கைப்பற்றினார். நியூசிலாந்து அணியின் ஓபனிங் பார்ட்னர்ஷிப்பை மிக அற்புதமாக பந்து வீசி உடைத்த பின்னர் 73-வது ஓவரை வீச ரவிச்சந்திரன் அஸ்வின் வந்தார். அந்த ஓவரில் ரவிச்சந்திரன் அஸ்வின் டாம் லதமை தன்னுடைய அபாரமான பந்து வீச்சால் நெருக்கடிக்கு ஆளாக்கினார்.

அந்த ஓவரின் 4-வது பந்தில் லதம் அஸ்வின் பந்துவீச்சில் எல்பிடபிள்யூ ஆனார். ரவிச்சந்திரன் அஸ்வின் அப்பீல் செய்தும் அந்த விக்கெட்டை நிதின் மேனன் இறுதி வரை கொடுக்கவில்லை. இந்திய அணியின் கேப்டன் ரஹானேவும் ரிவ்யூ எடுக்கவில்லை. இதனால் இந்திய ரசிகர்கள் சற்று வருத்தம் அடைந்தனர்.

நிதின் மேனனை தனது பாணியில் கலாய்த்த ரவிச்சந்திரன் அஸ்வின்

சில ஓவர்களுக்கு பின்னர் மீண்டும் ரவிச்சந்திரன் அஸ்வின் நிதின் மேனன் முன்நிலையில் பந்து வீச வந்தார். அப்போது நிதின் மேனன் ரவிச்சந்திரன் அஸ்வினை அழைத்து எனது பார்வையை நீங்கள் தடுக்கிறீர்கள் என்று எச்சரித்தார். கேப்டன் ரஹானே அஸ்வினுக்கு சப்போர்ட் செய்யும் விதத்தில் அவர் முறையாக தானே பந்து வீசுகிறார் என்று எதிர் கேள்வியை நடுவர் நிதின் மேனனிடம் எடுத்து வைத்தார்.

- Advertisement -

இவ்வாறு பந்து வீசினால் என்னால் எல்பிடபிள்யூ முடிவுகளை சரியாக அறிவிக்க முடியாது என்றும் பதிலுக்கு கூறினார். அவர் கூடிய அடுத்த நொடியில் ரவிச்சந்திரன் அஸ்வின், நீங்கள் எல்பிடபிள்யூ அழைப்புகளை எடுக்க மாட்டீர்கள் என்று ( லதம் எல்பிடபிள்யூ குறித்த விஷயத்தை முன்னெடுத்து வைத்து ) நக்கலாக ரவிச்சந்திரன் அஸ்வின் நிதின் மேனனை கலாய்த்தார்.

இவர்கள் பேசிய அந்த உரையாடல் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் ரசிகர்கள் மத்தியில் வைரல் ஆகி வருவது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -