“அஸ்வின் ஜடேஜா இரண்டு பேருமே விளையாடலாம்; இதுதான் காரணம்” – அற்புதமான தொழில்நுட்ப விஷயத்தை பேசிய சச்சின்!

0
587
Sachin

இன்று இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே இங்கிலாந்து லண்டன் ஓவல் மைதானத்தில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி நடக்க இருக்கிறது!

இதற்கான இந்திய அணியில் இருந்து யார் யாரை விளையாடும் அணிக்கு எடுத்துச் செல்லலாம் என்பதுதான் தற்போது இந்திய அணியின் பயிற்சியாளர் மற்றும் கேப்டனுக்கு மிகப்பெரிய தலைவலியாக இருக்கிறது.

- Advertisement -

காரணம், ஓவல் ஆடுகளம் இறுதி நாட்களில் சுழற்பந்து வீச்சுக்குச் சாதகமாக இருக்கும், அதே சமயத்தில் மைதான நிலைமைகளும் ஆடுகளத்தின் தன்மையும் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமாகத் தெரிகிறது.

இதன் காரணமாக அஸ்வின் ஜடேஜா இருவரையும் அணியில் வைப்பதா? அல்லது அஸ்வினை வெளியில் வைத்து சர்துல் தாகூரை உள்ளே கொண்டு வருவதா? என்கின்ற பெரிய குழப்பம் நிலவுகிறது.

இதேபோல் இங்கிலாந்தில் நியூசிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்ற முதல் டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் தவறான அணியைத் தேர்வு செய்துதான் இந்திய அணி தோற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இந்த நிலையில் இது குறித்து பேசி உள்ள சச்சின் டெண்டுல்கர் “இந்திய அணி ஓவல் மைதானத்தில் விளையாடுவது அவர்களுக்கு மகிழ்ச்சியாக இருக்கும். ஓவல் ஆடுகளத்தின் தன்மை போட்டி நடக்கும் பொழுது சுழற் பந்துவீச்சாளர்களுக்கு உதவக் கூடிய வகையில் இருக்கும். இவர்கள் கொஞ்சம் கொஞ்சமாக ஆட்டத்தில் உள்ளே வருவார்கள்.

ஆடுகளம் எப்போதும் பந்து திரும்பக் கூடிய வகையில் இருக்க வேண்டும் என்பது கிடையாது. ஆடுகளத்தில் பந்து பவுன்ஸ் ஆகும் பொழுதும், ஆடுகளத்தில் இருந்து கொஞ்சம் ஸிப் கிடைக்கும் பொழுதும், மேலும் மைதான சூழ்நிலையிலும், பந்தின் பளபளப்பான பக்கத்தையும் சார்ந்த விஷயமாக இருக்கும்.

அவர்களால் பந்தை ட்ரிப்ட் செய்ய முடிந்தால், பிட்ச் செய்யாமலே பந்தைக் காற்றில் பேச வைக்க முடியும். எனவே ஓவல் இந்தியாவுக்கு நல்ல மைதானம். எனவே இங்கு இரண்டு சுழற் பந்துவீச்சாளர்களுடன் செல்லலாம்!” என்று கூறியிருக்கிறார்!