ரோகித் கிடையாது.. புல் ஷாட்ல மாஸ்டர் அந்த வீரர்தான்.. நண்பன்கிட்ட பேசிக்கிறேன் – அஸ்வின் தேர்வு

0
502
Ashwin

சமீபத்தில் ரவிச்சந்திரன் அஸ்வின் பத்திரிக்கையாளர் விமல் குமார் உடனான சந்திப்பில் நிறைய விஷயங்கள் குறித்து மனம் திறந்து பேசி இருந்தார். இதில் புல் ஷாட் அடிப்பதில் சிறந்த பேட்ஸ்மேன் யார் என கூறியிருக்கிறார்.

மேலும் இது போலான பல கேள்விகளுக்கு இந்திய வீரர்களை சம்பிரதாயத்திற்கு தேர்ந்தெடுக்காமல் உண்மையாகவே தனக்கு யார் சரியான வீரர்களாக தோன்றுகிறதோ அவர்களையே அஸ்வின் தேர்வு செய்தார். தற்போது புல் ஷாட் சிறந்த முறையில் அடிக்கும் பேட்ஸ்மேன் யார்? என்ற கேள்விக்கும் அப்படியே செய்திருக்கிறார்.

- Advertisement -

சச்சின் விராட் கோலியை தவிர்த்த அஸ்வின்

இந்த கேள்விக்கு முன்பாக சிறந்த கவர் டிரைவ் அடிக்கக்கூடிய வீரர்கள் யார் என்ற கேள்வி முன் வைக்கப்பட்டது. இந்த கேள்விக்கு பெரும்பாலானவர்கள் ரவிச்சந்திரன் அஸ்வின் குறைந்தபட்சம் சச்சின் டெண்டுல்கரை கூறுவார் அல்லது அவரோடு சேர்த்து விராட் கோலி பெயரையும் கூறுவார் என்று எதிர்பார்த்தார்கள்.

இந்த நிலையில் அனைவரும் ஆச்சரியப்படும் விதமாக இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் மற்றும் இங்கிலாந்து அணியின் முன்னாள் தொடக்க ஆட்டக்காரர் மார்க்கஸ் டிரஸ்கோதிக் இருவரும் சிறந்த கவர் டிரைவ் விளையாடும் பேட்ஸ்மேன்கள் என தேர்வு செய்து கேள்வி கேட்டவரையும் ஆச்சரியப்படுத்தினார்.

- Advertisement -

புல் ஷாட்டில் சிறந்த பேட்ஸ்மேன்

பத்திரிக்கையாளர் விமல் குமார் ராபிட் பையர் ரவுண்டில் சிறந்த புல் ஷாட் விளையாடும் பேட்ஸ்மேன் யார்? என கேள்வியை முன் வைத்தார். இந்தக் கேள்வியை வெளிநாட்டு பேட்ஸ்மேன்களிடம் கேட்டால் கூட ரோஹித் சர்மாவை தேர்ந்தெடுத்து இருப்பார்கள். ஏனென்றால் அவர் யாரையும் விட மிகச் சிறப்பாக இந்த ஷாட் விளையாட கூடியவராக இருக்கிறார். குறிப்பாக முன் காலிலேயே விளையாடக் கூடியவர்.

இதையும் படிங்க: என்கிட்ட பும்ரா பவுலிங் ஐடியா கேட்டார்.. ரோகித் என் பந்தை ஆட முடியல – பாக் வழி யுஏஇ பவுலர் பேட்டி

இந்த நிலையில் ரவிச்சந்திரன் அஸ்வின் தற்போது 49 வயதான ஆஸ்திரேலியாவின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் சிறந்த புல் ஷாட் விளையாடும் பேட்ஸ்மேன் என தேர்ந்தெடுத்தார். மேலும் இது குறித்து தனது நண்பன் ரோஹித் சர்மாவிடம் தானே பேசிக் கொள்வதாகவும் நகைச்சுவையாக அந்த பேட்டியில் குறிப்பிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -