அஷ்வின் ஆல்ரெடி ஆஸ்திரேலியா பேட்ஸ்மேன்களின் மூளைக்குள் புகுந்து விட்டார் – வாசிம் ஜாஃபர் அதிரடி!

0
578
Wasim jaffer

ஆஸ்திரேலியா அணி பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் டிராபி விளையாட இந்தியாவிற்கு தற்பொழுது வந்துள்ளது. இந்த டெஸ்ட் தொடரில் மொத்தம் நான்கு டெஸ்ட் போட்டிகள் விளையாடப்படும்!

நடைபெற்று வரும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கான மிக முக்கியமான தொடராக இந்திய அணிக்கு இந்த டெஸ்ட் தொடர் அமைந்திருக்கிறது. உலகளவில் கிரிக்கெட் ரசிகர்களுக்கு இந்த டெஸ்ட் தொடர் மிகப்பெரிய எதிர்பார்ப்பாகவும் இருக்கிறது!

- Advertisement -

மேலும் ஆஸ்திரேலியாவை அதன் சொந்த நாட்டில் வைத்து இந்தியா தொடர்ந்து இரண்டு முறை பார்டர் கவாஸ்கர் டிராபியில் தோற்கடித்தது, ஆஸ்திரேலியா கிரிக்கெட்டை வெகுவாக அசைத்துப் பார்த்திருக்கிறது. தற்பொழுது விளையாடும் ஆஸ்திரேலிய வீரர்கள் மற்றும் முன்னாள் ஆஸ்திரேலிய வீரர்கள் இந்திய தொடர் குறித்து தங்களது மிகுந்த எதிர்பார்ப்பை வெளிப்படுத்தி வருகிறார்கள்.

மேலும் தங்களுக்கு இந்தியாவில் பயிற்சி போட்டிகள் வேண்டாம் பயிற்சி போட்டிகளுக்கு தரப்படுகின்ற ஆடுகளம் போட்டி ஆடுகளம் போல் இருக்காது. இந்தியா இந்த விஷயத்தில் ஏமாற்றும் என்றெல்லாம் பேசி வந்ததோடு, சுழற்பந்து வீச்சு எடுபடும் வகையில் பெங்களூரில் உள்ள ஆலூர் என்ற இடத்தில் அமைந்துள்ள மைதானத்தில் தனிப்பட்ட வகையில் ஆஸ்திரேலியா வீரர்கள் பயிற்சி செய்து வருகிறார்கள். மேலும் இந்திய அணியின் முதன்மை சுழற் பந்துவீச்சாளரான அஸ்வின் போன்று பந்து வீசக்கூடிய 21 வயதான குஜராத்தை சேர்ந்த பரோடா அணிக்காக விளையாடி வரும் மகேஷ் பத்தியா என்பவரை வைத்து ஆஸ்திரேலியா வீரர்கள் பயிற்சி செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து வாசிம் ஜாஃபர் ஆஸ்திரேலியா வீரர்களின் சீண்டல்களுக்கு பதில் அளிக்கும் வகையில், போட்டி தொடங்குவதற்கு என்னமோ ஐந்து நாட்கள் இருக்கிறது ஆனால் அஸ்வின் ஆஸ்திரேலியா வீரர்களின் மூளைக்குள் எப்பொழுதோ புகுந்து விட்டார் என்று உள்குத்தாக தாக்கி இருக்கிறார்.

- Advertisement -

மேலும் வாசிம் ஜாபர் இதற்கு முன்பு இந்த தொடர் குறித்து பேசி இருக்கும் பொழுது இந்தியா நியூசிலாந்து தொடர்களை தாண்டி இந்திய வீரர்கள் ரஞ்சித் தொடரில் விளையாடுவது அவர்கள் எவ்வளவு அனுபவம் வாய்ந்தவர்களாக இருந்தாலும் பெரிய அளவில் உதவக் கூடியதாக இருக்கும் என்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது!