அஸ்வினை வெறுப்பேற்றிய விக்கெட் கீப்பர்; வச்சு செய்த இந்திய அணி! – வீடியோ இணைப்பு!

0
49211
Ind vs Ban

இந்திய மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையேயான இரண்டு போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடர் நேற்று தொடங்கி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது . இதில் முதலில் ஆடிய இந்திய அணி 404 ரண்களுக்கு ஆட்டம் இழந்தது. அதனைத் தொடர்ந்து ஆடிய பங்களாதேஷ் அணி இன்றைய ஆட்ட நேர முடிவில் 133 ரன்களுக்கு 8 விக்கெட்டுகளை இழந்துள்ளது.

இந்திய பங்களாதேஷ் அணிகளுக்கு இடையே ஆன முதல் டெஸ்டின் இரண்டாம் நாளான இன்று தொடர்ந்து ஆடிய இந்திய அணி ஸ்ரேயாஸ் ஐயரின் விக்கெட்டை இழந்தது . இதனைத் தொடர்ந்து இந்திய அணியின் ஆல்ரவுண்டர் அஸ்வின் மற்றும் குல்தீப் யாதவ் ஆகியோர் எட்டாவது விக்கெட்டிற்கு சிறப்பாக ஆடி 92 நாட்களை சேர்த்தனர் . ரவிச்சந்திரன் அஸ்வின் அபாரமாக ஆடி அரை சதம் அடித்தார் .

- Advertisement -

உணவு இடைவேளையை தாண்டி இந்திய அணி சிறப்பாக ஆடிக் கொண்டிருந்த நிலையில் மெஹதி ஹசன் வீசிய பந்தை கிரீசில் இருந்து வெளியே வந்து ஆட முயன்ற அஸ்வினை ஸ்டம்பிங் செய்தார் பங்களாதேஷ் அணியின் விக்கெட் கீப்பர் நூருல் ஹசன் .ஸ்டம்பிங் செய்வதற்கு முன்பாக அவர் செய்த செயல் அஸ்வினை மட்டுமல்லாமல் கிரிக்கெட் ரசிகர்களையும் கோபப்படுத்தியது.

அஸ்வின் ஸ்டம்பிங் செய்ய வாய்ப்பு கொடுத்தும் உடனடியாக செய்யாமல் அவரை வெறுப்பேற்றுவது போல் காலம் தாழ்த்தி மீண்டும் அவரை கிரீசுக்குள் வரவைத்து ஸ்டம்பிங் செய்தார் .இதனால் கடுப்பான அஸ்வின் எரிச்சலுடன் வெளியேறினார் . இதனைத் தொடர்ந்து மேலும் இருந்து இரண்டு விக்கெட்டுகளையும் இழந்து இந்திய அணி 404 ரன்கள் ஆட்டம் இழந்தது.

பங்களாதேஷ் அணியின் இந்த செயலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாகவே இந்தியாவின் பந்து வீச்சு துவக்கத்தில் இருந்தே இருந்தது. ஆட்டத்தின் முதல் பந்திலையே சாண்டோவின் விக்கெட்டை வீழ்த்தினார் முகமது சிராஜ் .. அதன் பிறகு பங்களாதேஷ் அணியின் நம்பிக்கை நட்சத்திரம் லிட்டன் தாஸ் அதிரடியாக ஆடிக் கொண்டிருந்தார் .

- Advertisement -

முகமது சிராஜ் தனது இரண்டாவது ஸ்பெல்லை வீச வந்த போது அவர் லிட்டன் தாஸிடம் ஏதோ கூறினார் . ஆனால் லிட்டன் தாஸ் நீ சொல்வது எனக்கு கேட்கவில்லை என்பது போல் சைகை செய்தார் . அதற்கு அடுத்த பந்தியிலேயே லிட்டன் தாசை கிளீன் போல்ட் செய்தார் முகமது சிராஜ் . அப்போது அவரும் விராட் கோலி இணைந்து நீ சொல்வது எதுவும் எங்களுக்கு கேட்காது என்பது போல் சைகை செய்து லிட்டன் தாஸ்க்கு பதிலடி கொடுத்தனர் . அதன்பிறகு தொடர்ந்து சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்த பங்களாதேஷ் ஆட்ட நேர முடிவில் 133 ரன்களுக்கு 8 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிக் கொண்டிருக்கிறது