அஷ்வினுக்கு இடம் கிடையாது.. இஷ்டம் இல்லனா போட்டிய பாக்காதிங்க – இந்திய நட்சத்திர வீரர் சர்ச்சை பேச்சு!

0
1763
ICT

இந்த மாதம் இறுதியில் நடக்க இருக்கும் ஆசியக் கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கான 17 பேர் கொண்ட இந்திய அணி நேற்று முன்தினம் அறிவிக்கப்பட்டது. இந்த அணியில் பேக்கப் வீரராக 18-வது நபராக சஞ்சு சாம்சன் இணைத்துக் கொள்ளப்பட்டு இருக்கிறார்!

இந்திய மண்ணில் உலகக் கோப்பை நடைபெற இருக்கின்ற நிலையில், சுழற் பந்து வீச்சுக்கு சாதகமான தன்மைகள் இருக்கும். இப்படி இருக்கும் பொழுது அணியின் பிரதான சுழற் பந்துவீச்சாளர் சாகல் அதிரடியாக நீக்கப்பட்டு இருக்கிறார்.

- Advertisement -

மேலும் அறிவிக்கப்பட்டுள்ள இந்திய அணியில் இடது கை சுழற் பந்துவீச்சாளர்கள் ரவீந்திர ஜடேஜா அக்சர் படேல் என இரண்டு பேர் தொடர்கிறார்கள். இது தற்பொழுது விமர்சனத்திற்கு உள்ளாகி வருகிறது.

ஒரே அணியில் இரண்டு இடது கை சுழற் பந்துவீச்சாளர்கள் தேவையா? அந்த இடத்தில் பேட்டிங் செய்யக்கூடிய ரவிச்சந்திரன் அஸ்வின் இல்லை வாஷிங்டன் சுந்தர் இருவரில் யாரையாவது தேர்வு செய்து இருக்க வேண்டும் என்கின்ற கருத்துகள் சமூக வலைதளத்தில் ரசிகர்களால் முன்வைக்கப்பட்டு வருகிறது.

இன்னொரு பக்கம் ஒரு நாள் கிரிக்கெட்டில் மிகச் சிறப்பான சராசரி வைத்திருக்கக்கூடிய சஞ்சு சாம்சன் பேக்கப் வீரராக மாற்றப்பட்டு இருக்கிறார். அதே சமயத்தில் தொடர்ந்து ஒருநாள் போட்டிகளில் தடுமாறி வரும் சூரியகுமார் யாதவ் 17 பேர் கொண்ட இந்திய அணியில் இடம் பெற்று இருக்கிறார். இந்த விஷயமும் தற்போது விமர்சனம் ஆகி வருகிறது.

- Advertisement -

இந்த நிலையில் விமர்சனங்கள் குறித்து பேசி உள்ள சுனில் கவாஸ்கர் ” இந்திய அணி தேர்வு செய்யப்பட்டு விட்டது. இனி அஸ்வின் பற்றி யாரும் பேசக்கூடாது. சர்ச்சைகளை உருவாக்கக் கூடாது. இதுதான் நம்முடைய அணி. உங்களுக்கு இந்த அணி பிடிக்கவில்லை என்றால் நீங்கள் போட்டிகளை பார்க்காதீர்கள். ஆனால் சிலரைத் தேர்ந்தெடுத்து இருக்க வேண்டும் என்று குறை கூறுவது தவறான மனநிலை. இந்த அணியால் உலகக் கோப்பையை வெல்ல முடியும். விலக்கப்பட்ட எந்த வீரரும் தனக்கு அநீதி இழைக்கப்பட்டதாக கூறமுடியாது என்று நம்புகிறேன்!” என்று கூறியிருக்கிறார்!

ஆசியக்கோப்பைக்கு அறிவிக்கப்பட்டுள்ள இந்திய அணி பிடிக்கவில்லை என்றால் போட்டிகளை பார்க்காதீர்கள் என்று சுனில் கவாஸ்கர் ரசிகர்களை கூறியிருப்பது தற்பொழுது சமூக வலைதளத்தில் மிகவும் பரபரப்பான விமர்சனத்திற்கு உள்ளாகும் விஷயமாக மாறி இருக்கிறது.

இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் கிரிக்கெட் பார்ப்பதை நிறுத்திவிட்டால் இந்திய கிரிக்கெட் வாரியம் என்ன செய்யும்? இந்திய கிரிக்கெட் வீரர்கள் என்ன செய்வார்கள்? ரசிகர்கள் இல்லாமல் இவர்கள் யாருமே கிடையாது என்று ரசிகர்கள் தங்களது கருத்துக்களை மிக காட்டமாக சமூக வலைதளத்தில் பதிவு செய்து வருகிறார்கள்!