“அஷ்வினுக்கு இந்திய டி20 அணிக்கு வர தகுதியில்லை.. அவர் இடம் வேற” – யுவராஜ் சிங் பேட்டி

0
149
Yuvraj

இந்திய வெள்ளைப் பந்து கிரிக்கெட் அணியின் தூணாக விளங்கிய யுவராஜ் சிங் நேற்று முதல் பல முக்கியமான விஷயங்கள் குறித்து தன்னுடைய கருத்தை மிக வெளிப்படையாக தைரியமாக பேசி வருகிறார்.

இந்த வகையில் அவர் இந்திய அணிக்கு ஐசிசி தொடர்களின் போது மென்டராக வருவதற்கு விருப்பம் இருப்பதாகவும், மேலும் இந்திய அணிக்கு பயிற்சி குழுவில் இடம் பெறவும் விருப்பம் இருப்பதாகவும் தெரிவித்திருந்தார்.

- Advertisement -

இந்திய இளம் வீரர்கள் முக்கியமான போட்டிகளில் விளையாட மனரீதியாக இருக்கும் சவால்களை முறியடிப்பதற்கு தன்னால் உதவ முடியும் என்று கூறியிருந்தார்.

மேலும் மும்பை இந்தியன்ஸ் அணியில் ரோகித் சர்மா மற்றும் ஹர்திக் பாண்டியா இடையில் ஏதாவது ஈகோ பிரச்சனை இருந்தால் உட்கார்ந்து பேசி சரி செய்து கொள்ள வேண்டும் என்றும் கூறியிருந்தார். சேர்ந்து விளையாடும் பொழுது இப்படியான பிரச்சனைகள் சகஜம் என்று அவர் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

தற்பொழுது யுவராஜ் சிங் இதன் தொடர்ச்சியாக ரவிச்சந்திரன் அஸ்வின் பற்றிய ஒரு முக்கியமான கருத்தை பேசி இருக்கிறார். அவர் தொடர்ச்சியாக உலகக் கோப்பை இந்திய அணிகளில் இடம்பெறுவது குறித்து தனது ஆட்சேபனையை தெரிவித்திருக்கிறார்.

- Advertisement -

இதுகுறித்து யுவராஜ் சிங் பேசும்பொழுது “அஷ்வின் ஒரு சிறந்த பந்துவீச்சாளர் ஆனால் அவர் ஒரு நாள் மற்றும் டி20 கிரிக்கெட் இந்திய அணியில் இடம் பெறுவதற்கு தகுதியானவர் என்று நான் நினைக்கவில்லை. அவர் பந்துவீச்சில் திறமையானவர் ஆனால் அவர் பேட்டிங்கில் என்ன கொண்டு வருகிறார்? என்று பார்க்க வேண்டும். மேலும் ஒரு ஃபீல்டராக அவரால் என்ன செய்ய முடியும்? என்றும் பார்க்க வேண்டும். ஆனால் வெள்ளைப்பந்து கிரிக்கெட்டிற்கு அவர் தகுதியானவர் என்று நான் நினைக்கவில்லை.

ஹர்திக் பாண்டியா அணிக்கு மிகவும் முக்கியமான வீரர். அவர் இந்திய அணிக்கு கட்டாயம் தேவை. அவர் காயத்தால் பாதிக்கப்பட்டிருக்கிறார். அவர் குணமடைந்து சரியாக விளையாடுவதற்கான நேரத்தை நாம் கொடுக்க வேண்டும். மேலும் கேப்டன்சி சம்பந்தமாக நமக்கு நிறைய விருப்ப தேர்வுகள் இருக்க வேண்டும். இந்திய டி20 அணிக்கு கேப்டன்சி செய்த சூரியகுமார் இருக்கிறார். மேலும் ஐபிஎல் தொடரில் குஜராத் அணிக்கு கேப்டன்சி செய்யப் போகும் கில் இருக்கிறார்” என்று கூறியிருக்கிறார்.