இந்தியாகிட்ட யாரும் பேச முடியாது.. அவங்கதான் உலக கிரிக்கெட்டை நடத்தறாங்க.. மோதாதிங்க – கிறிஸ் கெயில் பேட்டி

0
13469
Gayle

நடந்து முடிந்த ஐபிஎல் 17வது சீசனில் ப்ளே ஆப் சுற்றில் விளையாடாமல் இங்கிலாந்து வீரர்கள் பாகிஸ்தானுக்கு எதிரான டி20 தொடரில் விளையாடுவதற்கு சொந்த நாட்டிற்கு திரும்பினார்கள். இதேபோல் பங்களாதேஷ் வீரர் முஸ்தஃபிசுர் ரஹ்மான் திரும்ப நாட்டிற்கு அழைக்கப்பட்டார். இது அப்பொழுது பெரிய சர்ச்சையாகப் பேசப்பட்டது. இந்த நிலையில் இதற்கு தீர்வு குறித்து பிரபல முன்னால் கிரிக்கெட் வீரர் கெயில் பேசியிருக்கிறார்.

தற்போது இந்தியாவில் இந்திய கிரிக்கெட் வாரியத்தால் ஆண்டுதோறும் நடத்தப்படும் ஐபிஎல் டி20 லீக் உலகின் மிகப்பெரிய வருமானத்தை கொடுக்கும் விளையாட்டு நிகழ்வாக இருக்கிறது. கிளப் கால்பந்தாட்ட லீக்குகளுக்கு கிடைக்கும் வருமானத்தை விட இது மிக அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இதன் காரணமாக இந்திய கிரிக்கெட் வாரியம் உலகக் கிரிக்கெட்டில் பெரிய ஆதிக்க சக்தியாக இருக்கிறது. அதே சமயத்தில் ஐபிஎல் மற்றும் சர்வதேச போட்டி அட்டவணைகள் ஒன்றோடு ஒன்று மோதிக் கொள்ளும் போது பிரச்சனைகள் உருவாகிறது. நடந்து முடிந்த ஐபிஎல் தொடரிலும் முக்கால்வாசி தொடரில் இங்கிலாந்து வீரர்கள் நாடு திரும்பினார்கள்.

இதுகுறித்து கெயில் பேசும் பொழுது “ஐபிஎல் நடந்து கொண்டிருக்கும் பொழுது தங்கள் நாட்டிற்காக விளையாடுவதற்கு வீரர்கள் வெளியேறுவதை நீங்கள் பார்க்கிறீர்கள். உங்களிடம் ஐபிஎல் தொடருக்கு என்று தனி காலம் இருந்தால், அந்த நேரத்தில் மற்ற சர்வதேச போட்டிகள் நடக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். ஏனென்றால் சர்வதேச போட்டிக்கு ஒரு அணி வெளியேறும் போது அந்த அணி மட்டுமே பயனடைகிறது. இது இந்தியாவிற்கு நியாயமானது கிடையாது. இப்படி ஒரு அமைப்பை நடத்த முடியாது.

இதுவே உலகக்கோப்பை என்றால் அந்த நேரத்தில் அது மட்டும்தான் நடக்கும். வேற எந்த சர்வதேச போட்டிகளும் நடக்காது. இதுபோலவே ஐபிஎல் போட்டிகள் நடக்கும் பொழுது ஐபிஎல் மட்டுமே நடக்க வேண்டும். சர்வதேச போட்டிகள் நடக்கக்கூடாது. ஒரு கிரிக்கெட் வாரியம் ஐபிஎல் தொடரிலிருந்து தங்களுடைய வீரரை பாதியில் வெளியில் இழுப்பது நியாயமற்ற ஒன்று.

- Advertisement -

இதையும் படிங்க : நேத்து ரோகித் சர்மாகிட்ட.. எங்க ஆள் ஸ்டார்க் சிக்குனது இப்படிதான் – பிராட் ஹாக் விளக்கம்

மேலும் வீரர்களுக்கான கோரிக்கைகளை முறையிடுவதற்கு ஒரு அமைப்பை உருவாக்க முடியுமா? என்றால் முடியாது. இந்தியாவிடம் இது பற்றி யாரும் பேச முடியாது. இந்தியாதான் கிரிக்கெட்டை நடத்திக் கொண்டிருக்கிறது தெரியுமா? இப்படி இருக்கும் பொழுது இந்தியாவுடன் யார் பேசப் போகிறார்கள்? யார் இந்தியாவுக்கு சவால் விடப் போகிறார்கள்? யாருமே கிடையாது. இந்தியாதான் கிரிக்கெட்டை கட்டுப்படுத்துகிறது” என்று கூறி இருக்கிறார்.