ரிஷப் பண்ட் திக்வேஷ் ரதியை ஏன் அவமானப்படுத்தறீங்க.. பவுலர்னா இளக்காரமா போச்சா? – அஸ்வின் விமர்சனம்

0
959
Ashwin

நேற்று திக்வேஷ் ரதி செய்த ரன் அவுட்டை லக்னோ அணியின் கேப்டன் திரும்ப பெற்றுக் கொண்டார். தற்போது இது குறித்து ரவிச்சந்திரன் அஸ்வின் மிகவும் கடுமையான முறையில் ரிஷப் பண்ட்டை விமர்சனம் செய்திருக்கிறார்.

இந்த போட்டியில் பவுலர் முனையில் ஜிதேஷ் சர்மா பந்து வீசுவதற்கு முன்பாகவே வெளியேறி செல்கிறார் என பவுலர் திக்வேஷ் ரதி ரன் அவுட் செய்தார். ஆனால் அது ரன் அவுட் இல்லை என நடுவர் தீர்ப்பளித்தார். அதே சமயத்தில் இந்த ரன் அவுட்டுக்கான மேல் முறையீட்டை திரும்ப பெற்றுக் கொள்வதாக ரிஷப் பண்ட் நடுவரிடம் கூறிவிட்டார். இது ரவிச்சந்திரன் அஸ்வினை தற்பொழுது கோபப்படுத்தி இருக்கிறது.

- Advertisement -

இது உண்மையில் அவமானம்

இது குறித்து ரவிச்சந்திரன் அஸ்வின் பேசும்பொழுது “உண்மையில் ஒரு வீரரை ஆதரிப்பதே கேப்டனின் வேலை. ஒரு பவுலரை சிறுமையாக உணர வைப்பது ஒரு கேப்டனின் வேலை கிடையாது. அவர் அவுட் மேல் முறையீட்டை திரும்ப பெற்றதன் மூலமாக இதை செய்திருக்கிறார். இது குறித்து அவர்கள் முன்பே விவாதித்து இருக்க வேண்டும்”

“ஆனால் அவர்கள் இது குறித்து முன்பே விவாதித்தார்களா? என்பது குறித்து நமக்கு தெரியாது. ஆனால் கோடிக்கணக்கான மக்கள் முன்னிலையில் அந்த இளைஞனை அவமானப்படுத்துவதை நிறுத்துவோம். நாம் வேறு யாருக்காவது இப்படி செய்கிறோமா? ஒரு பந்துவீச்சாளர் மட்டும் ஏன் இவ்வளவு சிறியவராக தெரிகிறார்? இது உண்மையில் அவமானம்”

- Advertisement -

திக்வேஷ் ரதி என் சொந்தக்காரர் இல்லை

“இப்படி நடக்கும் பொழுது ஒரு பந்துவீச்சாளர் தன்னை சிறியவராக உணர்கிறார். அவர் இனிமேல் மீண்டும் இப்படியான ரன் அவுட்டை செய்ய மாட்டார். மக்களும் அவரை இதுபோல செய்யக்கூடாது என இனி சொல்வார்கள். இது உண்மையில் அவரை பாதிக்கும். ஆனால் யாரும் ஒரு பந்துவீச்சாளர் பற்றி கவலைப்படுவது கிடையாது. நீங்கள் கோடிக்கணக்கான மக்கள் முன்னிலையில் அவுட் மேல் முறையீட்டை வாபஸ் பெற்று அவரை அவமானப்படுத்துகிறீர்கள்”

இதையும் படிங்க : ஐபிஎல் 2025.. பஞ்சாப் , ஆர்சிபி முதல் குவாலிபயரில் மோதல்.. பிளேயிங் லெவன், பீட்ச் ரிப்போர்ட்:

“திக்வேஷ் ரதி என்னுடைய உறவினர் கிடையாது. எனக்குத் தெரிந்தவரும் கிடையாது. ஆனால் நீங்கள் ஒரு பவுலரை காயப்படுத்துகிறீர்கள் என்று சொல்கிறேன். இதைப் பற்றி யாரும் நினைப்பது இல்லை. மேலும் இது விக்கெட் எடுப்பது பற்றியது கிடையாது. ஒரு பவுலர் ஒரு ரன்னை இரண்டு இரண்டாக மாற்றுவது சம்பந்தப்பட்டது” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -