கில் ரன் அவுட்.. சாய் சுதர்சனுக்கு பெரிய நிம்மதியை தந்திருக்கும்.. காரணம் இதான் – சஞ்சய் பாங்கர் பேட்டி

0
160
Gill

இங்கிலாந்து அணிக்கு எதிரான ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் இந்திய கேப்டன் கில் ரன் அவுட் ஆனது குறித்து இந்திய முன்னாள் பேட்டிங் பயிற்சியாளர் சஞ்சய் பாங்கர் கருத்து தெரிவித்திருக்கிறார்.

நேற்று ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் முதல் நாளில் சிறப்பாக ஆரம்பித்து 21 ரன்கள் எடுத்திருந்த கில் கவனம் இழந்து ஓடி ரன் அவுட் ஆனார். இதற்கு அடுத்த இந்திய அணிக்கு மேலும் மூன்று விக்கெட்டுகள் சரிய இந்திய அணி நெருக்கடியில் சிக்கியது.

- Advertisement -

குஜராத் பார்ட்னர்கள்

ஐபிஎல் தொடரில் கில் மற்றும் சாய் சுதர்சன் இருவரும் குஜராத் அணிக்கு தொடக்க ஆட்டக்காரர்களாக விளையாடுகிறார்கள். சாய் சுதர்சன் எப்பொழுதும் வேகமாக ஓடக்கூடியவர். இந்த நம்பிக்கையின் காரணமாக வில் பந்தை நேராக தட்டிவிட்டு நம்பிக்கையுடன் அழைத்தார். ஆனால் சாய் சுதர்சன் டெஸ்ட் கிரிக்கெட் என்பதால் ஓடவில்லை. இதில் தவறு கில் மீதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து சஞ்சய் பாங்கர் பேசும் பொழுது ” நேற்று இந்த நிகழ்வில் எனக்கு மிகவும் பிடித்த ஒரு விஷயம் என்னவென்றால், நிச்சயமாக கில் ரன் அவுட் ஆனதிற்காக மிகுந்த ஏமாற்றம் அடைந்திருப்பார். இருந்த போதும் தனது கூட்டாளி சாய் சுதர்சனிடம் அவர் தவறான முறையில் எந்த சிக்னலையும் செய்யவில்லை. ரன் அவுட்டை ஏற்றுக்கொண்டு அமைதியாக சென்று விட்டார். இது சாய் சுதர்சனுக்கு நிம்மதியை கொடுத்திருக்கும்”

- Advertisement -

ரன் அவுட் நடந்தது இதனால்தான்

“பொதுவாக பேட்டிங் ஆரம்பத்தில் ஒருவித பதட்டம் இருக்கும் போது இப்படி நடக்கும். ஆனால் நேற்று கில் விளையாட வந்து 21 ரன்கள் எடுத்து செட்டில் ஆகி இருந்தார். ஆனால் இந்த நேரத்தில் சிங்கிள் ரொட்டேட் செய்து கொண்டு இருந்தார்கள். இதன் காரணமாகவே அதன் போக்கிலேயே சென்றதால் ரன் அவுட் நடந்து விட்டது”

இதையும் படிங்க : இங்கிலாந்து பிட்ச்சில் போட்ட மாஸ் ஸ்கெட்ச்.. வினோதமாக விளையாடிய விதி.. இந்திய அணிக்கு சாதகம்.. என்ன நடந்தது?

“இந்த இருவருக்கும் இடையில் கொஞ்சம் தவறான புரிதல் களத்தில் ரன் ஓடுவதில் இருந்தது. இறுதியில் அவர் விரும்பியதை விட பந்து நேராக விளையாடப்பட்டபோதும், கில் ரன் எடுக்கலாம் என்று முடிவு செய்தது தவறானதாக அமைந்துவிட்டது” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -