‘நான் ரிவியூவிற்கு இன்னொரு ரிவியூ எடுத்ததின் காரணம் இதுதான்” – ரவிச்சந்திரன் அஸ்வின் புது விளக்கம் !

0
1650

தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தால் நடத்தப்பட்டு வரும் டிஎன்பிஎல் கிரிக்கெட் போட்டிகளின் எட்டாவது சீசன் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது . இந்த சீசனின் நான்காவது போட்டியில் திண்டுக்கல் மற்றும் திருச்சி அணிகள் நேற்று மோதின .

இந்தப் போட்டியில் முதலில் ஆடிய திருச்சி அணி 120 ரன்கள் ஆல் அவுட் ஆனது . திண்டுக்கல் அணியின் பந்து வீச்சில் வருண் சக்கரவர்த்தி மூன்று விக்கெட்டுகளையும் ரவிச்சந்திரன் அஸ்வின் இரண்டு விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். திருச்சி அணியில் அதிகபட்சமாக கங்கா ஸ்ரீதர் 48 ரண்களும் 39 ரண்களும் எடுத்தனர் .

- Advertisement -

இதனைத் தொடர்ந்து 121 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய திண்டுக்கல் அணி 14.5 ஓவரில் நான்கு விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 122 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது . திண்டுக்கல் அணியின் துவக்க வீரர் சிவம் சிங் அபாரமாக ஆடி 46 ரன்கள் எடுத்திருந்தார் . இந்தப் போட்டியில் வரும் சக்கரவர்த்தி ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார் .

நேற்றைய போட்டியின் போது திருச்சி அணியின் வீர ராஜ்குமார் ரவிச்சந்திரன் அஸ்வின் பந்துவீச்சில் விக்கெட் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து ஆட்டம் இழந்தார் . இந்த முடிவை அவர் டிஆர்எஸ் முறையில் ரிவ்யூ செய்தார் இந்த ரிவீவை தொடர்ந்து மூன்றாவது நடுவர் அவுட் இல்லை என தீர்ப்பு கூறினார். பந்து பேட்டில் படுவதற்கு முன்பே அல்ட்ரா எட்ஜ் மீட்டரில் ஸ்பைக் வந்ததால் பேட் தரையில் பட்டது என தீர்மானித்து அவர் நாட் அவுட் என்று முடிவை வழங்கினார் ஆனால் இந்த முடிவை எதிர்த்து ரவிச்சந்திரன் அஸ்வின் ரிவியூ செய்தார். இது ரசிகர்கள் மற்றும் கிரிக்கெட் விமர்சகர்களிடையே சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது ..

இந்த முடிவு குறித்து போட்டிக்கு பின் விளக்கம் அளித்து இருக்கிறார் ரவிச்சந்திரன் அஸ்வின் . இதுகுறித்து பரிசளிப்பு விழாவின் போது பேசிய அவர் ” நாங்கள் இளம் அணியை பெற்றிருக்கிறோம் . இந்த வீரர்களுடன் விளையாடுவது மகிழ்ச்சியாகவும் நன்றாகவும் இருக்கிறது . இளம்பிரர்களையும் அனுபவசாலிகளையும் கொண்ட ஒரு அணியை உருவாக்கி அதன் மூலம் வெற்றியை நோக்கி பயணிக்கிறோம்” ன்று தெரிவித்தார் .

- Advertisement -

மேலும் தொடர்ந்து பேசிய அஸ்வின் ” இங்கிலாந்தில் இருந்து வந்த பயண களைப்பு இருந்தாலும் வீரர்களுடன் களத்தில் விளையாடுவது என்பது ஒரு அலாதியான அனுபவம் எனக் கூறினார் . துவக்க வீரர் சிவம் சிங் பவர்ஃபிலையில் ஆடிய விதம் அருமையாக இருந்தது . அதன்பிறகு எங்கள் அணி அமைத்த ஒன்று அல்லது இரண்டு பார்ட்னர் ஷிப் வெற்றியை தேடி தந்தது எனக் கூறினார் . மேலும் மூன்றாவது நடுவரின் முடிவிற்கு எதிராக டிஆர்எஸ் எடுத்தது பற்றிய கேள்விக்கு பதிலளித்த அஸ்வின் ” தமிழ்நாடு பிரீமியர் லீக்கில் முதல்முறையாக டிஆர்எஸ் பயன்படுத்தப்படுகிறது . மேலும் பேட்டை கடந்து செல்லும்போது ஸ்பைக் வந்தது. மூன்றாவது நடுவர் கொடுத்த தீர்ப்பு எனக்கு திருப்தியாக இல்லை . மேலும் நான் ரிவ்யூ எடுக்கும் போது வேறு கோணங்களில் பார்ப்பார்கள் என்று நினைத்தேன்” என தெரிவித்துள்ளார்.