208 ரன்கள் பார்ட்னர்ஷிப்.. கெத்தாக உள்ளே வந்து உடைத்த அஸ்வின்; அடுத்தடுத்து 3 விக்கெட்டை தூக்கி அசத்தல்!

0
338

கேமெரூன் கிரீன் விக்கெட்டை வீழ்த்தி, கிரீன்-கவாஜா ஜோடியின் 208 ரன்கள் பார்ட்னர்ஷிப்பை உடைத்தார் ரவிச்சந்திரன் அஸ்வின்.

பார்டர் கவாஸ்கர் டிராபியில் நான்காவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் ஆஸ்திரேலியா அணி முதல் இன்னிங்சில் பேட்டிங் செய்து வருகிறது. முதல் நாள் முடிவில் கவாஜா சதம் மற்றும் கிரீன் அதிரடியான 49 ரன்கள் அடிக்க, 4 விக்கெட் இழப்பிற்கு 255 ரன்கள் எடுத்தது.

- Advertisement -

2ம் நாள் ஆட்டம் இன்று துவங்கியது. உணவு இடைவேளை வரை இந்த ஜோடியின் பார்ட்னர்ஷிப்பை உடைக்க முடியாமல் இந்திய பவுலர்கள் திணறினர். கேமெரூன் கிரீன் அதிரடியை நிறுத்தாமல் ஆடிவந்தார்.

உணவு இடைவேளை வரை, அதே 4 விக்கெட்டுகள் மட்டுமே விழுந்திருந்தது. கிரீன் 95 ரன்களுடன் தனது முதல் சதத்தை எதிர்நோக்கி இருந்தார். மறுமுனையில் துவக்க வீரர் கவாஜா 150 ரன்களில் இருந்தார்.

உணவு இடைவேளை முடிந்துவந்தும் இந்திய அணியால் இந்த பார்ட்னர்ஷிப்பை உடைக்க முடியவில்லை. கேமரூன் க்ரீன் தனது முதல் டெஸ்ட் சதத்தை அடித்தார். கவாஜா-கிரீன் ஜோடி 208 ரன்கள் சேர்த்தது.

- Advertisement -

இறுதியாக, கேமெரூன் க்ரீன் விக்கெட்டை எடுத்து இந்த பார்ட்னர்ஷிப்பை உடைத்தார் அஸ்வின். அதே ஓவரில் அலெக்ஸ் கேரி விக்கெட்டையும் எடுத்து இந்திய அணிக்கு மீண்டும் நம்பிக்கை கொடுத்தார்.

Cameron Green

அதற்கு அடுத்த ஓவரில் புதிதாக உள்ளே வந்த மிட்ச்சல் ஸ்டார்க் விக்கெட்டையும் வீழ்த்தி ஆட்டத்தை இந்திய அணியின் பக்கமாக திருப்பினார் அஸ்வின்.

தற்போது ஆஸி., அணி 400 ரன்களை கடந்து விளையாடி வருகிறது. கவாஜா 175 ரன்களிலும், நேதன் லயன் 4 ரன்களிலும் களத்தில் உள்ளனர்.