பேட்டிங் லெஜன்ட் லட்சுமணனின் சாதனையை பேட்டிங்கில் முறியடித்த அஷ்வின்; அடுத்தது தோனியின் ரெக்கார்டுதான்!

0
975
Ashwin

இந்திய கிரிக்கெட் கண்ட சுழற் பந்துவீச்சு ஆல்ரவுண்டர்களில் தலை சிறந்த ஒருவராகத் தமிழகத்தைச் சேர்ந்த ரவிச்சந்திரன் அஸ்வின் விளங்கி வருகிறார்.

டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் விளையாடும் அணியில் அவரது பெயர் இடம்பெறும் ஒவ்வொரு முறையும் ஏதாவது ஒரு சாதனையை செய்யக்கூடிய அளவில், அவருடைய இத்தனை வருட கிரிக்கெட் வாழ்க்கை மிகச் சிறப்பாக இருந்திருக்கிறது.

- Advertisement -

தற்பொழுது அதிக சர்வதேச விக்கெட் வீழ்த்திய இந்தியர்களில் 700 விக்கெட்டுகளை தாண்டி கும்ப்ளேவுக்கு அடுத்து இரண்டாவது வெற்றிகரமான பந்துவீச்சாளராக ரவிச்சந்திரன் அஸ்வின் நீடித்து வருகிறார்.

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக நடந்து வரும் முதல் டெஸ்ட் போட்டியில் முதலில் லிங்க்ஸில் 5 விக்கெட்டும் இரண்டாவது இன்னிங்ஸில் 7 வைக்கட்டும் வீழ்த்தி அபாரமான செயல்பாட்டை வெளிப்படுத்தினார்.

இந்த நிலையில் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் விளையாடிய ரவிச்சந்திரன் அஸ்வின் பேட்டிங்கிலும் அபாரமாகச் செயல்பட்டு அரை சதம் அடித்து, இந்திய அளவில் பேட்டிங் லெஜன்ட் லக்ஷ்மணனின் பேட்டிங் சாதனை ஒன்றை முறியடித்து இருக்கிறார்.

- Advertisement -

இந்திய டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆறாவது மற்றும் அதற்கு கீழே விளையாடி அதிக ரன்கள் குவித்தவர்கள் பட்டியலில் ரவிச்சந்திரன் அஸ்வின் லட்சுமணனை பின்னுக்குத் தள்ளி மூன்றாவது இடத்திற்கு முன்னேறி இருக்கிறார்.

முதல் இரண்டு இடங்களில் இந்தியா கண்ட தலைசிறந்த வேகப்பந்துவீச்சு ஆல்ரவுண்டர் கபில்தேவ், உலகம் கண்ட தலைசிறந்த பினிஷர்களில் ஒருவரான மகேந்திர சிங் தோனியும் நீடிக்கிறார்கள்.

இந்திய டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆறாவது மற்றும் அதற்கு கீழான இடங்களில் இறங்கி அதிக ரன்கள் குவித்த முதல் ஐந்து வீரர்களின் பட்டியல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

5116 ரன்கள் – கபில்தேவ்
4717 ரன்கள் – மகேந்திர சிங் தோனி
3129 ரன்கள் – ரவிச்சந்திரன் அஸ்வின்
3108 ரன்கள் – விவிஎஸ் லக்ஷ்மணன்
2696 ரன்கள்- ரவீந்திர ஜடேஜா

ரவிச்சந்திரன் அஸ்வின் இதுவரை டெஸ்ட் கிரிக்கெட்டில் 93 போட்டிகளில் 176 இன்னிங்ஸ்களில் 486 விக்கட்டுகளை வீழ்த்தி இருக்கிறார். இவரது சிறந்த பந்துவீச்சு 59 ரன்கள் தந்து ஏழு விக்கெட்டுகள் கைப்பற்றியது ஆகும்.

மேலும் ரவிச்சந்திரன் அஸ்வின் டெஸ்ட் கிரிக்கெட்டில் மொத்தம் 131 இன்னிங்ஸ்கள் பேட்டிங் களம் இறங்கி 3129 ரன்கள் அடித்திருக்கிறார். இதில் 5 சதங்கள் மற்றும் 13 அரை சதங்கள் அடக்கம்.

நடைபெற்று வரும் வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் தொடரின் கடைசி போட்டியில் மேற்கொண்டு அவர் 500 சர்வதேச டெஸ்ட் விக்கெட்டுகளை எட்டுவது கடினம். ஆனால் அதற்கு அடுத்த தொடர்களில் அவர் இந்த சாதனையை எளிதாகச் செய்வார் என்று எதிர்பார்க்கலாம்!