வரும் ஐபிஎல் 2026 சீசனில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியிலிருந்து அஸ்வின் வெளியேற போவதாக செய்திகள் வெளி வந்தது. அஸ்வின் அடுத்த சீசஆனால், இதில் தற்போது புதிய டிவிஸ்ட் ஒன்று, வெளியாகி உள்ளது. 37 வயதான அஸ்வின், தன்னை எவ்வாறு அணியில் பயன்படுத்த உள்ளீர்கள் இல்லை என்றால், அணியை விட்டு பிரிய தயாராக இருப்பதாக சிஎஸ்கேவிடம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
2025 ஐபிஎல் மெகா ஏலத்தில் அஸ்வின் 9.75 கோடி ரூபாய்க்கு சிஎஸ்கே அணியால் வாங்கப்பட்டு, கிட்டத்தட்ட 10 ஆண்டுக்கு பிறகு தனது சொந்த அணிக்கு திரும்பினார். இருப்பினும், அவரது கம்பேக் எதிர்பார்த்தபடி அமையவில்லை.சிஎஸ்கேவின் 14 லீக் போட்டிகளில் 9 போட்டிகளில் மட்டுமே விளையாடினார்.
வேறு அணிக்கு செல்வாரா?
இது 2009ஆம் ஆண்டு அறிமுகமான பிறகு அவர் ஒரு சீசனில் குறைவாக விளையாடிய தொடர் இதுவாகும். அஸ்வின் என்காமியும் 9.12 என்ற அளவில் இருந்தது. இதற்கு முன் அவரது அதிகபட்ச எக்னாமியாக 8.49 ஆக இருந்தது.ஐபிஎல் 2026 ஏல அட்டவணை இன்னும் இறுதி செய்யப்படவில்லை. இதே போன்று தக்க வைக்கப்படும் வீரர்களை அறிவிக்கும் இறுதிநாள் தொடர்பான காலக்கெடுவும் அறிவிக்கப்படவில்லை.
மெகா ஏலம் ஒவ்வொரு மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறுகிறது, ஆனால் மினி ஏலம் ஒவ்வொரு ஆண்டுதோறும் நடைபெறும். இந்த ஏலத்திற்கு ஒரு வாரம் முன்பு வரை வீரர்களுக்கான டிரேட் அனுமதிக்கப்படும். அதாவது சிஎஸ்கே மற்றும் அஸ்வின் அடுத்த கட்ட திட்டத்தை முடிவு செய்ய இன்னும் நேரம் உள்ளது.
பின்வாங்கிய அஸ்வின்:
இந்த தருணத்தில் அணியை விட்டு விலகும் முடிவை கைவிடுங்கள் என்று அஸ்வினிடம் சிஎஸ்கே கோரிக்கை விடுத்ததாக தெரிகிறது. அதன் பின் அஸ்வின் தனது யூடியூப் சேனலில் சஞ்சு சாம்சனுடன் நடத்திய உரையாடலில், அணியை விட்டு பிரிந்தால், சிஎஸ்கே அகாடமியின் இயக்குநராக உள்ள அவரது பொறுப்பிலிருந்து விலக வேண்டியிருக்கும் என்பது குறித்து பேசி இருக்கிறார். இதனால் அஸ்வின் தனது முடிவில் இருந்து பின்வாங்கி இருப்பதாக தெரிகிறது.
இதையும் படிங்க: தோனி கிடையாது.. உலகின் தலைசிறந்த விக்கெட் கீப்பர் இந்த இந்தியர்தான் – அசாருதீன் கருத்து
2025 சீசனில் ருதுராஜ் கெய்க்வாட் காயமடைந்த பிறகு தோனி மீண்டும் கேப்டனாக பொறுப்பேற்றார். தோனியின் எதிர்காலம் தொடர்பான அறிவிப்பு டிசம்பர் மாதமே வெளியாகும். எனினும் கெய்க்வாட் அணிக்கு திரும்பும் நிலையில், அவர் தான் தலைமை தாங்குவார் என்று கருதப்படுகிறது. இதற்கிடையில், அஸ்வின் ஐபிஎல்-இல் 221 போட்டிகளில் 187 விக்கெட்டுகளுடன் 7.29 என்ற எக்னாமி விகிதத்திலும், 118 என்ற ஸ்ட்ரைக் ரேட்டில் 833 ரன்களுடனும் லீக்கின் மிகச்சிறந்த பவுலர்களில் ஒருவராக உள்ளார்.






