இந்திய அணியின் முன்னாள் கேப்டன் முகமது அசாருதீன் உலகின் தலைசிறந்த விக்கெட் கீப்பராக மகேந்திர சிங் தோனியை தவிர்த்து இன்னொரு இந்திய விக்கெட் கீப்பரை பாராட்டியிருக்கிறார்.
பொதுவாக இந்திய கிரிக்கெட்டில் தலைசிறந்த விக்கெட் கீப்பராக தோனியை எல்லோரும் தேர்ந்தெடுப்பார்கள். அதே சமயத்தில் உலக அளவில் ஆடம் கில்கிறிஸ்ட்டை அதிக அளவில் தேர்ந்தெடுப்பார்கள்.
அசாருதீன் வித்தியாச தேர்வு
இந்த நிலையில் 1983 ஆம் ஆண்டு இந்திய அணி முதல் முறையாக ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரை வென்ற போது இந்திய அணியின் விக்கெட் கீப்பராக இருந்த சையத் கிர்மானியை முகமது அசாருதீன் உலகின் தலைசிறந்த விக்கெட் கீப்பராக கூறியிருக்கிறார். அவர் குறித்த புத்தக வெளியீட்டு விழாவின்போது இதை பேசி இருக்கிறார்.
இதுகுறித்து முகமது அசாருதீன் பேசும் பொழுது “சையத் கிர்மானி உலகின் நம்பர் 1 விக்கெட் கீப்பர். அவர் போல் உலகில் இதுவரையில் இன்னொருவர் பிறக்கவில்லை. நான்கு சுழல் பந்துவீச்சாளர்களை அணியில் வைத்துக்கொண்டு அவர்களுக்கு விக்கெட் கீப்பிங் செய்தது அவ்வளவு சாதாரண விஷயம் இல்லை. 1983 ஆம் ஆண்டு ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் அவர் சில நல்ல கேட்ச்கள் எடுத்தார்”
முகமது சிராஜயும் பாராட்டுகிறேன்
“அதே ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் ஜிம்பாப்வே அணிக்கு எதிரான முக்கியமான போட்டியில் கபில் தேவ் தனியாக 175 ரன்கள் எடுத்தார். அப்பொழுது அவருக்கு உறுதுணையாக முக்கியமான 24 ரன்களை சையத் கிர்மானி எடுத்தார். அவருக்கு கடவுள் நீண்ட ஆயுளை வழங்கட்டும். அவர் குறித்த இந்த புத்தகத்தை பலரும் படிப்பு மகிழட்டும். மேலும் இந்த புத்தகம் வெற்றி பெறட்டும்”
இதையும் படிங்க : இனி சச்சின் கவாஸ்கர் வழிதான்.. எல்லாரும் பயப்படுற அந்த தொடர்ல ஆட போறேன் – சர்பராஸ் கான் பேச்சு
“சிராஜை சந்திக்கும் வாய்ப்பும் எனக்கு கிடைத்தது. அவர் இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் மிக அருமையாக பந்து வீசினார். நான் அவரையும் வாழ்த்த விரும்புகிறேன். அவர் தொடர்ந்து வளர்ந்து சிறப்பாக செயல்படுவார்” என்று நம்புகிறேன்.






