ஐபிஎல் 2025

தோனி என்கிட்ட சொன்ன அதை சொல்ல மாட்டேன்.. தவான் பீட்டர்சன் எனக்கு ஹெல்ப் பண்றாங்க – அசுதோஷ் சர்மா பேட்டி

தற்போது ஐபிஎல் தொடரில் சிறந்த பினிசராக உருவெடுத்து டெல்லி அணிக்காக விளையாடும் அசுதோஷ் சர்மா மகேந்திர சிங் தோனி தனக்கு கூறிய அறிவுரையை வெளியில் சொல்ல முடியாது என்று தெரிவித்திருக்கிறார்.

- Advertisement -

நடப்பு ஐபிஎல் தொடரில் லக்னோ மணிக்கு எதிரான போட்டியில் டெல்லி அணி தோல்வியின் விளிம்பில் இருந்த பொழுது 31 பந்து 66 ரன்கள் எடுத்து நம்ப முடியாத வெற்றியை கொண்டு வந்தார். கடந்த ஆண்டு பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக விளையாடிய இவர் இறுதிக்கட்டத்தில் சிறப்பாக விளையாடி போட்டியை வென்று கொடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

கெவின் பீட்டர்சன் – ஷிகர் தவான்

தற்போது டெல்லி அணியில் மென்டராக இருக்கும் கெவின் பீட்டர்சன் தனக்கு மிகவும் நம்பிக்கை அளிப்பவராகவும், சிறந்த ஆலோசனைகளை வழங்க கூடியவராக இருப்பதாகவும், அதேபோல் கடந்த ஆண்டு பஞ்சாப் கிங்ஸ் அணியில் தனக்கு கேப்டனாக இருந்த ஷிகர் தவான் ஆட்டம் குறித்து நிறைய விஷயங்களை தனக்கு தெரிவித்து தொடர்ந்து உதவி செய்து வருவதாகவும் அசுதோஷ் சர்மா கூறியிருக்கிறார்.

இதுகுறித்து அவர் பேசும் பொழுது “நான் கெவின் பீட்டர்சனுடன் டக் அவுட்டை பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். வலைப் பயிற்சியில் அவர் எனக்கு நிறைய உதவி செய்து வருகிறார். அவர் எனக்கு தொடர்ந்து ஆலோசனைகளை கொடுத்து வருகிறார். அவர் உயர் மட்ட கிரிக்கெட்டில் சிறப்பான முறையில் விளையாடியவர். எனவே அவருடைய ஆலோசனைகள் எனக்கு மிகவும் உதவியாக இருக்கிறது”

- Advertisement -

தோனி சொன்னதை சொல்ல மாட்டேன்

“ஷிகர் தவான் என்னுடைய வழிகாட்டியாக இருக்கிறார். கடந்த முறை அவருடன் பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக கேம்ப் செய்யப்பட்ட காலத்தில் இருந்து நான் பேசி வருகிறேன். எனக்கு அவர் நிறைய விஷயங்களில் உதவி செய்திருக்கிறார். குறிப்பாக விளையாட்டில் மனநலம் எவ்வாறு அமைய வேண்டும் என்பதில் அவர் எனக்கு நிறைய உதவி செய்திருக்கிறார். கிரிக்கெட்டில் ஒவ்வொரு வீரருக்கும் தனித்திறமைகள் இருப்பதாக சொன்ன அவர், ஒருவருடைய மனப்போக்கு மற்றும் தன்னம்பிக்கைதான் அதிக தூரம் கொண்டு செல்ல முடியும் என்று கூறினார்”

இதையும் படிங்க : ரகானே சொல்வதை கேட்க முடியாதா?.. கொல்கத்தா ஆடுகளத்தை இப்படித்தான் வச்சிருப்பேன் – ஆடுகள அமைப்பாளர் பேச்சு

“கடந்த ஆண்டு நாங்கள் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக விளையாடிய பொழுது தோனி பாய் இடம் பேசினேன். அவர் போட்டியை முடிப்பதற்காக களம் இறங்கும் பொழுது அவரது மனநிலை எவ்வாறு இருக்கும் என்று கேட்டேன். அவர் எனக்கு அதில் நிறைய விஷயங்களை சொன்னார். ஆனால் அது ஒரு ரகசியம், நான் அதை வெளியில் சொல்ல மாட்டேன்” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -
Published by

Recent Posts