கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தின் ஆடுகளத்தை சுழல் பந்துவீச்சுக்கு சாதகமாக மாற்ற முடியாது என்று அந்த ஆடுகளத்தின் அமைப்பாளர் கூறியதாக வந்த செய்திக்கு, தற்போது சம்பந்தப்பட்ட சுஜன் முகர்ஜி பதில் அளித்திருக்கிறார்.
நடப்பு ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணியில் இருக்கும் சிறந்த சுழல் பந்துவீச்சாளர்களுக்கு கொஞ்சம் உதவி செய்யும்படி தங்களது சொந்த மைதானத்தில் ஆடுகளம் அமைந்தால் நல்லது என்று கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டன் ரகானே கருத்து தெரிவித்திருந்தார். இதைச் சுற்றி தற்பொழுது நிறைய சர்ச்சைகள் வெடித்திருக்கிறது.
சமூக வலைதளத்தில் வெளியான கருத்து
இந்த நிலையில் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தின் ஆடுகள அமைப்பாளர் சுஜன் முகர்ஜி ரகானே கேட்கும் படி ஆடுகளத்தை அமைக்க முடியாது எனவும், தான் இங்கு வேலை செய்யும் வரையில் இப்படித்தான் ஆடுகளம் இருக்கும் எனவும், மேலும் ஆர்சிபி சுழல் பந்துவீச்சாளர்கள் வெங்கட் கைப்பற்றிய பொழுது, கொல்கத்தா சுழல் பந்துவீச்சாளர்கள் ஏன் விக்கெட் கைப்பற்றவில்லை? என்றும் கேள்வி எழுப்பியதாக செய்திகள் வந்தது.
தற்போது ரகானேவின் கருத்து மற்றும் கொல்கத்தா ஆடுகள அமைப்பாளரின் கருத்து இரண்டுக்கும் ஆதரவு எதிர்ப்பு என நிறைய கருத்துக்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. இந்த நிலையில் இதில் சம்பந்தப்பட்ட கொல்கத்தா ஆடுகள அமைப்பாளர் சுஜன் முகர்ஜி தற்பொழுது உண்மையில் தன்னுடைய நிலைப்பாடு இதில் என்ன? என்பது குறித்து பேசி இருக்கிறார்.
நான் நெகிழ்வான முறையில் இருக்க விரும்புகிறேன்
இதுகுறித்து அவர் பேசும் பொழுது “ஆடுகளம் தற்பொழுது மாறி வருகிறது கடைசிப் போட்டியில் ஆர்சிபி சுழல் பந்துவீச்சாளர்களுக்கு உதவி இருக்கவே செய்தது. ஆனால் இதில் மக்கள் ஏன் சர்ச்சையை கிளப்ப நினைக்கிறார்கள்? என்று புரியவில்லை. இதில் ரகானே என்ன சொன்னார் என்றால் பந்து இன்னும் கொஞ்சம் சுழன்று இருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்று சொன்னார்”
இதையும் படிங்க : சிஎஸ்கே ஆச்சரியப்படுத்த வேண்டிய அவசியம் என்ன?.. பெரிய சிக்கலில் இருக்காங்க – ஆகாஷ் சோப்ரா பேச்சு
“நான் ஒரு ஆடுகளத்தை உருவாக்கும் பொழுது ஸ்பின் மற்றும் பவுன்ஸ் இருக்கும்படி பார்த்துக் கொள்ளவே முயற்சி செய்கிறேன். நாங்கள் இது குறித்து விவாதித்து இருக்கிறோம். மேலும் கேகேஆர் அணி நிர்வாகம் இது குறித்து என்னை அணுகினால் நான் அவர்களின் பேச்சைக் கேட்க தயாராக இருக்கிறேன். எனக்கு கொல்கத்தா அணி உரிமையாளர் உடன் நல்ல உறவு இருக்கிறது. மேலும் அணி நிர்வாகத்தில் இருந்து என்னிடம் அவர்கள் பேசும்போது அதை நான் கேட்கிறேன். இது நெகிழ்வான ஒரு விஷயம் கடினமானது” கிடையாது என்று கூறியிருக்கிறார்.






