டவுட்டே வேணாம் இவர் தான் பெஸ்ட்! – விராட் கோலியா? சூரியகுமரா? ஆஷிஷ் நெக்ரா கருத்து!

0
1582

விராட் கோலி சூர்யா குமார் இருவரில் இவர்தான் பெஸ்ட் என்று கருத்து தெரிவித்துள்ளார் ஆஷிஷ் நெக்ரா.

இந்திய அணிக்கு நடந்து முடிந்த டி20 உலக கோப்பைத் தொடர் முற்றிலுமாக ஏமாற்றிதை கொடுத்திருக்கிறது. அரை இறுதி போட்டியில் இங்கிலாந்துடன் 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோற்றது ரசிகர்களால் இன்றளவும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

- Advertisement -

உலகக்கோப்பை தொடர் முழுவதும் இந்தியாவிற்கு பேட்டிங்கில் நம்பிக்கையாக திகழ்ந்தது விராட் கோலி மற்றும் சூரியகுமார் யாதவ் இருவர் மட்டுமே.

விராட் கோலி 4 அரைசதங்கள் உட்பட, 296 ரன்கள் அடித்துள்ளார். சூரியகுமார் யாதவ் 239 ரன்கள் அடித்திருகிறார். இதில் 3 அரைசதங்கள் அடங்கும்.

ஐசிசி வெளியிட்ட இந்த உலக கோப்பையில் சிறந்த 11 வீரர்கள் கொண்ட அணியில் இவர்கள் இருவரும் இடம் பிடித்திருக்கின்றனர்.

- Advertisement -

இந்த உலகக்கோப்பையின் சிறந்த பேட்ஸ்மேன் விராட் கோலியா? சூரியகுமார் யாதவா? என்ற விவாதம் தற்போது எழுந்திருக்கிறது. இதற்கு ஆஷிஷ் நெக்ரா, ஜாகிர் கான், சேவாக் போன்ற வீரர்கள் பலர் தங்களது கருத்துக்களை தெரிவித்துள்ளனர்.

இதற்கு ஆஷிஷ் நெக்ரா பதிலளித்ததாவது:

நடந்து முடிந்த உலகக் கோப்பையை பொறுத்தவரை, சூரியகுமார் யாதவ் சிறந்த பேட்ஸ்மேன் என்று கூறுவேன். அவர் இந்திய வீரர் என்பதால் மட்டுமல்ல, ஒட்டுமொத்த உலககோப்பை பார்க்கும் பொழுது அவரது பேட்டிங் எந்த அளவிற்கு தாக்கத்தை ஏற்படுத்தியது என்று நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

25 பந்துகளில் 50 அல்லது 60 ரன்கள் ஒருவர் அடிக்கிறார் என்றால் மிடில் ஓவர்களில் எவ்வளவு பெரிய தாக்கம் உண்டாகும். அணியின் ஸ்கோர் எவ்வளவு உயரும் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

விராட் கோலி சிறந்த வீரர் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால் யாரின் தாக்கம் அதிகம் என்று பார்க்கும் பொழுது சூரியக்குமார் யாதவ் தான் அதற்கு சரியான வீரராக தெரிகிறார்.

குறிப்பாக நான்காவது இடம் சற்று சிக்கல் ஆனது. அதில் களம் இறங்கி நல்ல ஸ்ட்ரைக் ரேட் மற்றும் தொடர்ச்சியாக ரன்கள் அடித்து வருவதால், இந்த உலகக் கோப்பையில் சூர்யகுமார் சிறந்த வீரர் என்று தயக்கமின்றி கூறுவேன்.” என்றார்.