சமி கடைசியில் அடி வாங்குனதுக்கும் குஜராத் தோத்ததுக்கும் காரணம் ஆசிஷ் நெக்ராதான் – வீரேந்திர சேவாக் கடுமையான குற்றச்சாட்டு!

0
794
Sehwag

கடந்த ஆண்டு லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் இரண்டு புதிய அணிகள் ஐபிஎல் தொடருக்கு வந்தன. இதில் குஜராத் டைட்டன்ஸ் அணி தனது முதல் ஐபிஎல் தொடரிலேயே கோப்பையை வென்று அசத்தியது!

கடந்த ஆண்டு மெகா ஏலத்தின் போது குஜராத் அணி உருவாக்கப்பட்டு இருக்கும் விதத்திற்கு அந்த அணி புள்ளி பட்டியலில் கடைசி இடத்தையே பிடிக்கும் என்று அனைவரும் கூறினார்கள். ஆனால் அதை குஜராத் அணி பொய்யாக்கியது!

- Advertisement -

மெகா ஏலத்தின் போது தற்போதைய அணியின் பயிற்சியாளர் ஆசிஷ் நெக்ரா ஏலத்தில் எந்த மாதிரி வீரர்களுக்கு போகிறார் என்றே புரியவில்லை. மேலும் இறுதிவரை விக்கெட் கீப்பர்களே இல்லாமல் இருந்து திடீரென்று ஏலத்தில் விழித்து வாங்கியது போல் இருந்தது. ஆனாலும் அவர்கள் அணிக்கலவை வெற்றிகரமான ஒன்றாக களத்தில் பரிணமித்தது!

இந்த நிலையில் தற்போது ஐந்து ஆட்டங்களை விளையாடி உள்ள குஜராத் டைட்டன்ஸ் அணி இரண்டு போட்டிகளில் தோல்வியை அடைந்துள்ளது. இரண்டு போட்டிகளுமே குஜராத் அணி வெல்ல வேண்டிய போட்டிகள்தான். இந்த தோற்ற இரண்டு போட்டிகளிலும் ஆசிஷ் நெக்ரா களத்தில் இருக்கும் வீரர்களிடம் குறிப்பாக பந்துவீச்சாளர்களிடம் தொடர்ந்து பேசிக்கொண்டே இருந்தார். மேலும் ஆட்டம் கொஞ்சம் கடினமாக இருக்கும் நிலைகளில் அவர் இப்படி எல்லைக் கோட்டுக்கு அருகில் வந்து பேசுவது வாடிக்கையான ஒன்றாக இருக்கிறது.

தற்பொழுது இது குறித்து கருத்து தெரிவித்துள்ள ஷேவாக் ” எனக்கு சிறுவயதில் இருந்தே நெக்ராவை தெரியும். இதனால் அவர் எல்லைக்கோட்டுக்கு அருகில் இருக்கும் தனது அணி பீல்டர்களிடம் பேசி தனது கவலையை தீர்த்துக் கொண்டார் என்று நினைக்கிறேன். ஆனால் என்ன செய்வது இது வீரர்களுக்கு சில நேரங்களில் அழுத்தத்தை கொடுக்கும். எல்லை கோட்டுக்கு அருகில் இருந்த சமி இடம் அவர் ஏதோ சொன்னார். பின்னர் சமி தனது கடைசி ஓவரில் அடி வாங்கினார்!” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -

மேலும் தொடர்ந்து பேசிய சேவாக்
” கடந்த சீசனை பார்த்தால் குஜராத் தோல்வியிலிருந்து வந்து வெற்றி பெறுவார்கள். ஆனால் இப்பொழுது வென்று இருக்க வேண்டிய இரண்டு போட்டிகளில் தோல்வி அடைந்து இருக்கிறார்கள். இது நேர்மாறான ஒன்று. அவர்களின் பந்துவீச்சின் போது நெக்ரா வீரர்களிடம் தொடர்ந்து பேசிக் கொண்டிருந்தது அந்த வீரர்களை பதட்டமடைய செய்திருக்கிறது என்று நான் தனிப்பட்ட முறையில் உணர்கிறேன்!” என்று கூறியிருக்கிறார்!