டிராவிஸ் ஹெட், வார்னர் அதிரடி ஆட்டம்.. சதத்தை நெருங்கும் ஸ்மித்.. பேஸ்பால் கிரிக்கெட்டை கையிலெடுத்த ஆஸ்திரேலியா! – முதல் நாள் ஆட்டத்தில் என்னென்ன நடந்தது?

0
804

டிராவிஸ் ஹெட், டேவிட் வார்னர் அதிரடியாக அரைசதம் அடித்தனர். ஸ்மித் சதத்தை நெருங்குகிறார். முதல் நாள் முடிவில் ஆஸ்திரேலிய அணி 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 339 ரன்கள் அடித்தது.

இங்கிலாந்தில் நடைபெற்று வரும் ஆஷஸ் டெஸ்ட் தொடரின் இரண்டாவது டெஸ்ட் போட்டி லாட்ஸ் மைதானத்தில் இன்று துவங்கியது. இம்முறை இங்கிலாந்து அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

- Advertisement -

ஆஸ்திரேலியா அணிக்கு துவக்க வீரர்களாக மற்றும் உஸ்மான் கவாஜா இருவரும் களமிறங்கினர். முதல் விக்கெட்டிற்கு இந்த ஜோடி 73 ரன்கள் சேர்த்தது. இவர்களின் பாட்னர்ஷிப்பை இளம் வீரர் ஜோஸ் டங் உடைத்தார்.

முதல் போட்டியில் ஆஸ்திரேலிய அணிக்கு ஹீரோவாக இருந்த கவாஜா இம்முறை 17 ரன்களுக்கு வெளியேறினார். இவர் வெளியேறிய அடுத்த சில ஓவர்களிலேயே அரைசதம் கடந்து அதிரடியாக விளையாடி வந்த டேவிட் வார்னர் அவுட் ஆனார். இவர் 88 பந்துகளில் 66 ரன்கள் அடித்திருந்தார்.

மூன்றாவது விக்கெட்டிற்கு மார்னஸ் லபுச்சானே மற்றும் ஸ்மித் இருவரும் ஜோடி சேர்ந்தனர். இந்த ஜோடி 102 ரன்கள் சேர்த்தது. 47 ரன்கள் அடித்திருந்த லபுச்சானே விக்கெட்டை ராபின்சன் எடுத்தார்.

- Advertisement -

பின்னர் வந்த டிராவிஸ் ஹெட் தனது வழக்கமான அதிரடியை வெளிப்படுத்த துவங்கினார். மறுமுனையில் ஸ்மித் நிதானமாக அணுகி வந்தார். பவுண்டரிகளில் மட்டுமே டீல் செய்து வந்த டிராவிஸ் ஹெட் 48 பந்துகளில் அரைசதம் கடந்தார். அதன் பிறகும் நிற்கவில்லை. வரும் பவுலர்களை எல்லாம் பவுண்டரிகளாக அடித்து தலைவலியை கொடுத்து வந்தார்.

பின்னர் ஜோ ரூட் பந்தில் இறங்கி அடிக்கப்பார்த்து ஸ்டம்பிங் முலம் அவுட் ஆகி வெளியேறினார். அதன்பின் தான் இங்கிலாந்து அணி நிம்மதி பெருமூச்சு விட்டது. இவர் 23 பந்துகளில் 14 பவுண்டரிகள் உட்பட 77 ரன்கள் அடித்து மொத்தமாக ஆஸ்திரேலியா அணியின் பக்கம் ஆட்டத்தை திருப்பிக் கொண்டிருந்தார்.

- Advertisement -

ஸ்மித் மற்றும் ஹெட் ஜோடி நான்காவது விக்கெட்டிற்கு 118 ரன்கள் சேர்த்தனர். அடுத்து உள்ளே வந்த கேமரூன் கிரீன் அதே ஓவரில் ரன் ஏதும் எடுக்காமல் வெளியேறினார்.

அரைசதம் கடந்த ஸ்மித், தொடர்ந்து நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தார். முதல் நாள் முடிவில் 85 ரன்களுடன் இறுதிவரை அவுட் ஆகாமல் இருந்தார். மறுபுறம் அலெக்ஸ் கேரி 11 ரன்கள் அடித்து அவுட் ஆகாமல் இருந்தார்.

முதல் நாள் முடிவில் ஆஸ்திரேலியா அணி 339 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்துள்ளது. முதல் போட்டியைப்போல அல்லாமல் இம்முறை ஆஸ்திரேலிய அணியின் அணுகுமுறை சற்று அதிரடியாக இருந்தது. இங்கிலாந்து அணியின் பேஸ்பால் அணுகுமுறைக்கு பதிலடி கொடுத்தது போலவும் இருந்தது.