மார்க் வுட் அதிவேகத்தில் சரிந்த ஆஸ்திரேலியா… வாய்ப்பு கிடைத்த முதல் போட்டியில் 5 விக்கெட்ஸ்.. மிட்ச்சல் மார்ஷ் அதிரடி சதம்.. ஆஸ்திரேலியா ஆல் அவுட்!

0
7766

மிச்சல் மார்ஸ் அதிரடியாக விளையாடி சதம் அடித்துக் கொடுக்க, மார்க் வுட் ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்த மூன்றாவது டெஸ்டின் முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியா அணி 263 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

ஹெட்டிங்கிலே மைதானத்தில் இன்று துவங்கிய மூன்றாவது டெஸ்ட் போட்டியில், இங்கிலாந்து அணி டாஸ் வென்று முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து ஆஸ்திரேலியா அணி பேட்டிங் இறங்கியது.

- Advertisement -

துவக்க வீரர் டேவிட் வார்னர்(4) போட்டியின் முதல் ஓவரிலேயே ஸ்டூடவர்ட் பிராட் பந்தில் ஆட்டம் இழந்தார். உஸ்மான் கவாஜா(13) மார்க் வுட் வீசிய அதிவேக பந்தில் கிளீன் போல்ட் ஆனார்.

அடுத்து வந்த மார்னஸ் லபுஜானே 21 ரன்கள் மட்டுமே அடித்து இருந்தபோது கிறிஸ் வோக்ஸ் வீசிய பந்தில் ரூட் வசம் பிடிபட்டு வெளியேறினார். உணவு இடைவேளை வருவதற்கு கடைசி ஓவருக்கும் முந்தைய ஓவரில் துரதிஷ்டவசமாக ஸ்டீவ் ஸ்மித் தனது விக்கெட்டை பறிகொடுத்தார். இவர் 22 ரன்களுக்கு ஸ்டூவர்ட் பிராட் வீசிய பந்தில் பேர்ஸ்டோவ் வசம் பிடிபட்டு வெளியேறினார்.

85 ரன்கள் விக்கெட்டுகளை இழந்து ஆஸ்திரேலியா அணி தடுமாறியபோது, இந்த ஆஷஸ் தொடரில் முதல்முறையாக பிளேயிங் லெவனில் எடுக்கப்பட்ட மிச்சல் மார்ஸ் அதிரடியாக விளையாடி இங்கிலாந்து அணியை திக்குமுக்காட வைத்தார். இவர் 17 பவுண்டரிகள் நான்கு சிக்ஸர்கள் உட்பட 118 பந்துகளில் 118 ரன்கள் அடித்து வோக்ஸ் பந்தில் வெளியேறினார்.

- Advertisement -

மார்ஷ்-க்கு பக்கபலமாக இருந்த டிராவிஸ் ஹெட் 39 ரன்கள் அடித்து கிறிஸ் வோக்ஸ் பந்தில் வெளியேறினார். அடுத்து வந்த வீரர்கள் வரிசையாக மார்க் வுட் வீசிய அதிவேகத்தில் வெளியேறினார்.

அபாரமாக பந்து வீசிய மார்க் வுட் இந்த ஆஷஸ் தொடரில் விளையாட வைக்கப்பட்ட முதல் போட்டியிலேயே ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தி மிரட்டினார். பிளேயிங் லெவனில் முதன்முறையாக விளையாட வைக்கப்பட்ட மற்றொரு வீரர் கிறிஸ் வோக்ஸ் மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றினார். ஆஸ்திரேலிய அணி இறுதியில் 263 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.