ஆசஸ் டெஸ்ட்.. தோல்விக்கு நான் பொறுப்பேற்கிறேன்.. தண்டனைக்கும் தயார்- இங்கிலாந்து பயிற்சியாளர் மெக்கல்லம் கருத்து

0
325

இங்கிலாந்துக்கு  எதிரான மூன்றாவது ஆசஸ் டெஸ்டை 82 ரன்கள் வித்தியாசத்தில் வென்று ஐந்து போட்டிகள் கொண்ட தொடரில் 3-0 என்ற கணக்கில் ஆஸ்திரேலிய அணி முன்னிலை பெற்றுள்ளது.  ஆஷஸ் தொடர் தோல்வி மூலம் மெக்கல்லம், கேப்டன் பென் ஸ்டோக்ஸ் மற்றும் அணியின் நிர்வாக இயக்குநர் ராப் கீ ஆகியோரின் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது.

இங்கிலாந்து 2010-11 சுற்றுப்பயணத்தில் தொடரை வென்றதிலிருந்து, ஆஸ்திரேலியாவில் ஒரு டெஸ்ட் போட்டியை கூட வென்றதில்லை.
அதன்பிறகு, இங்கிலாந்து ஆஸ்திரேலியாவில் 18 டெஸ்டுகளில் விளையாடி 16 தோற்றுள்ளது, இரண்டு டிரா ஆனது. மெக்கல்லம் மற்றும் ஸ்டோக்ஸ் ஜோடி தங்கள் பாஸ்பால் அணுகுமுறையால் நிலைமையை மாற்றியமைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

- Advertisement -

தோல்விக்கு நானே பொறுப்பு:

ஆனால் அது நடக்கவில்லை. தோல்விக்குப் பிறகு, பேசிய மெக்கல்லம்  “தோற்கும்போது ஏமாற்றமாக இருக்கும். நிச்சயமாக பல கேள்விகள் கேட்கப்படும் அதுவும் சரியானதே.நாங்கள் எல்லாவற்றையும் சரியாக செய்யவில்லை. பயிற்சியாளராக நானும் எல்லாவற்றையும் சரியாக செய்யவில்லை. அதற்கு நான் என் கையை உயர்த்தி பொறுப்பேற்கிறேன்.”

“நான் எங்கள் நம்பிக்கை மற்றும் தயாரிப்பு குறித்து மிகவும் உறுதியாக இருந்தேன். எங்களுக்கு வெளிநாட்டில் வெற்றிகரமாக இருந்த தொடர்களில் என்ன செய்தோமோ, அதே போலவே இங்கு செய்ய முயற்சித்தோம். ஒருவேளை அதை சரியாக செய்யவில்லை என நினைக்கிறேன். அதை நான் ஒப்புக்கொள்கிறேன்.”

- Advertisement -

இந்த யுத்தி வெற்றியை தந்தது:

“இறுதியில், உங்கள் அணியை எப்படி தயார்படுத்துவது என்பதற்கு பயிற்சியாளரான நீங்களே பொறுப்பு.
நாங்கள் 3-0 என்று பின்தங்கியுள்ளோம். எனவே அங்கு மாற்றத்திற்கு இடமிருக்கிறது என்று கூறலாம். மீண்டும், பயிற்சியாளராக நான் கையை உயர்த்தி, அதை சரியாக செய்யவில்லை என்று கூறுகிறேன். அதே நேரத்தில், அதே யுத்தி தான் முன்பு வெற்றி தந்தது என்பதால் ஆஸ்திரேலிய மண்ணிலும் அது வெற்றியை தரும் என்று நினைத்தேன்.”

இதையும் படிங்க: 148 வருட டெஸ்ட் வரலாறு.. கான்வே லாதம் எழுதிய புது சரித்திரம்.. வெஸ்ட் இண்டீஸ் மாஸ் போராட்டம்

“ பயிற்சியாளரின் வேலை மைதானத்தில் செயல்திறனை பெறுவது. நான் சரியாக செய்துவிட்டதாக நம்பினேன். ஆனால் தெளிவாக இல்லை. 3வது டெஸ்டில் கூட கடைசி இரு நாட்கள் எங்கள் சிறந்த கிரிக்கெட்டை விளையாடினோம். கடும்  அழுத்தத்தில் இருக்கும் போது, உங்கள் முடிவெடுத்தல் சற்று மங்கலாகிவிடும்.” என்று கூறினார்.
இதனிடையே இரு அணிகளுக்கும் இடையிலான 4வது  டெஸ்ட் 26ஆம் தேதி தொடங்கும்

- Advertisement -