148 வருட டெஸ்ட் வரலாறு.. கான்வே லாதம் எழுதிய புது சரித்திரம்.. வெஸ்ட் இண்டீஸ் மாஸ் போராட்டம்

0
234
Conway

தற்போது நியூசிலாந்து வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் மூன்றாவது டெஸ்ட் போட்டியில், 148 வருட டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் புதிய சாதனையை நியூசிலாந்து துவக்க ஆட்டக்காரர்கள் டெவோன் கான்வே மற்றும் டாம் லாதம் இருவரும் படைத்திருக்கிறார்கள்.

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி எட்டு விக்கெட் இழப்புக்கு 575 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. நியூசிலாந்து அணிக்கு தொடக்க ஆட்டக்காரர்கள் டாம் லேதம் சதம் அடித்து 137 ரன்கள், கான்வே இரட்டை சதம் அடித்து 227 ரன்கள் குவித்தார்கள்.

- Advertisement -

மீண்டும் சதம்

இதைத் தொடர்ந்து விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு கேவிம் காட்ஜ் சதம் அடித்து 126 ரன்கள் எடுத்தார். வெஸ்ட் இண்டீஸ் தனது முதல் இன்னிங்ஸில் கடுமையாக போராடி 420 ரன்கள் எடுத்து போட்டியை இழக்காமல் களத்தில் நின்றது.

இதைத் தொடர்ந்து விளையாடிய நியூசிலாந்து அணி இரண்டு விக்கெட் இழப்புக்கு 306 ரன்கள் எடுத்து டிக்ளர் செய்தது. நியூசிலாந்து அணிக்கு தொடக்க ஆட்டக்காரர்கள் டாம் லேதம் 101, கான்வே 100 ரன்கள் என மீண்டும் சதம் அடித்தார்கள். வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு 452 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

- Advertisement -

உலகச் சாதனை

148 வருட டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் ஒரு டெஸ்ட் போட்டியின் இரண்டு இன்னிங்ஸ்களிலும் இதுவரையில் ஒரு அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் இருவரும் சதம் அடித்தது கிடையாது என்பதை இந்த போட்டியில் கான்வே மற்றும் டாம் லாதம் ஜோடி முறியடித்து புதிய உலக சாதனையை படைத்திருக்கிறது.

இதையும் படிங்க : இஷான் கிஷான் செய்ய முடியாத காரியத்தை செஞ்சிருக்கார்.. இந்திய கிரிக்கெட்ல இது பெரிய விஷயம் – சபா கரீம் பாராட்டு

தற்போது நான்காவது நாள் முடிவில் வெஸ்ட் இண்டீஸ் 43 ரன்கள் எடுத்து விக்கெட் இழப்பில்லாமல் இருக்கிறது. நாளை ஐந்தாவது நாளில் வெஸ்ட் இண்டீஸ் போட்டியை விக்கெட் இழக்காமல் இருந்து டிரா செய்ய முடியும். அப்படி டிரா செய்தால் இந்த தொடரில் இரண்டு போட்டிகளை வெஸ்ட் இண்டீஸ் டிரா செய்ததாக இருக்கும். இது நியூசிலாந்து உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு முன்னேறுவதற்கு பெரிய தடையாக மாறும்.

- Advertisement -