டெஸ்ட் போட்டியின் 5 நாளும் பேட்டிங் செய்து கவாஜா… புதிய சாதனை! அப்படி செய்த இந்திய வீரர்கள் யார் யார் பேர் தெரியுமா?

0
2527

ஆஷஸ் தொடரின் முதல் டெஸ்டில் 5 நாளும் பேட்டிங் செய்து, டெஸ்ட் கிரிக்கெட்டில் புதிய சாதனை படைத்துள்ளார் ஆஸி., துவக்க வீரர் உஸ்மான் கவாஜா. இந்த சாதனை பட்டியலில் எத்தனை இந்திய வீரர்கள் இருக்கின்றனர் என்பதை பின்வருமாறு காண்போம்.

இங்கிலாந்தில் நடைபெற்று வரும் ஆஷஸ் தொடரின் முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்தது. 78 ஓவர்களில் 393 ரன்கள் அடித்து முதல் நாள் முடிவதற்குள் டிக்ளேர் செய்தது. இதனையடுத்து முதல் நாளில் வெறும் நான்கு ஓவர்கள் மட்டுமே பிடித்த ஆஸ்திரேலிய அணிக்கு துவக்க வீரர்களாக உஸ்மான் கவாஜா மற்றும் டேவிட் வார்னர் இருவரும் களமிறங்கினார்.

- Advertisement -

இரண்டாம் நாள் முழுவதும் பேட்டிங் செய்து சதம் அடித்த கவாஜா இறுதிவரை ஆட்டமிழக்காமல் நின்றார். மூன்றாவது நாள் முதல் செசன் வரை பேட்டிங் செய்த அவர், முதல் இன்னிங்சில் 141 ரன்களுக்கு ஆட்டம் இழந்தார்.

ஆஸ்திரேலியா அணி முதல் இன்னிங்ஸில் 386 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அதன் பிறகு இரண்டாவது இன்னிங்ஸ் பேட்டிங் துவங்கிய இங்கிலாந்து அணி நான்காம் நாள் தேநீர் இடைவேளை வரை பேட்டிங் செய்து 273 ரன்கள் அடித்து ஆல் அவுட் ஆனது.

அதன் பிறகு நான்காவது நாளில் மீண்டும் பேட்டிங் இறங்கிய உஸ்மான் கவஜா மற்றும் டேவிட் வார்னர் இருவரும் 281 ரன்கள் இலக்கை துரத்தினர். வார்னர்(36), லபுஜானே(13) மற்றும் ஸ்மித்(6) மூவரும் ஆட்டமிழந்தபோதும், கவாஜா உறுதியாக நான்காம் நாள் முடிவில் ஆட்டமிழக்காமல் நின்றார்.

- Advertisement -

ஐந்தாம் நாளின் முதல் செசன் முற்றிலுமாக மழை காரணமாக தடைப்பட்டது. உணவு இடைவேளை முடிந்து வானிலை மற்றும் மைதானத்தின் கண்டிஷன் இரண்டையும் பரிசோதித்த பிறகு பேட்டிங் நடைபெற்றது. ஐந்தாவது நாளிலும் உஸ்மான் கவாஜா தனது பேட்டிங் துவங்கினார்.

முதல் டெஸ்டின் ஐந்து நாட்களிலும் உஸ்மான் கவாஜா பேட்டிங் செய்ததன், டெஸ்ட் கிரிக்கெட்டில் வெகு சில வீரர்கள் செய்துள்ள சாதனையை செய்திருக்கிறார். 5 நாட்களும் பேட்டிங் செய்த 13ஆவது வீரர் ஆவார்.

இந்த சாதனையை படைத்த இந்திய வீரர்கள்!

டெஸ்ட் கிரிக்கெட்டில் 5 நாட்களும் பேட்டிங் செய்து, இந்த சாதனையை முதன்முதலாக படைத்தவர் இந்தியாவை சேர்ந்த ஜெஎல் ஜெய்சிம்ஹா ஆவார். இவர் 1960 ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக இந்த சாதனையை படைத்தார். அடுத்ததாக, 1984ஆம் ஆண்டு இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்டில் ரவி சாஸ்திரி இந்த சாதனையை படைத்தார். பின்னர் 2017ஆம் ஆண்டு இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் சித்தேஸ்வர் புஜாரா இந்த சாதனையை படைத்தது குறிப்பிடத்தக்கது.