“என்னைப் பொருத்தவரை தோனிக்கு இவருக்கும் பெரிய வித்தியாசம் கிடையாது!” – இளம் வீரரை பெரிய இடத்தில் வைத்து பாராட்டிய சுரேஷ் ரெய்னா!

0
1356
Raina

உலகக் கிரிக்கெட்டில் வித்தியாசமான அணுகு முறையில் கேப்டன்ஸியில் உலகம் முழுவதும் கிரிக்கெட் ரசிகர்களை மட்டுமல்லாது பல வீரர்களையும் கவர்ந்தவர் மகேந்திர சிங் தோனி!

இதனால் வரையிலான இந்திய கிரிக்கெட் வரலாற்றில் மிகப்பெரிய வெற்றிகரமான கேப்டன் மகேந்திர சிங் தோனிதான். பல இந்திய கேப்டன்கள் தனிப்பட்ட முறையில் சில குறிப்பிட்ட வெற்றிகளைத் தங்களது சாதனைகளாக வைத்திருக்கலாம். ஆனால் மகேந்திர சிங் தோனியிடம் மூன்று ஐசிசி கோப்பைகள் இருப்பது, அவரை தனிப்பெரும் கேப்டனாக இந்திய கிரிக்கெட்டில் காட்டுகிறது.

- Advertisement -

மகேந்திர சிங் தோனியைப் பொறுத்தவரை அவர் பெற்றிருக்கும் வெற்றி மட்டுமே அவருக்கான அடையாளம் கிடையாது. அந்த வெற்றியை அடைய அவர் எவ்வளவு அமைதியாகவும் அறிவுபூர்வமாகவும் செயல்பட்டார் என்பதுதான் அவரது அடையாளமாக இருக்கிறது.

இந்திய அணிக்காக மகேந்திர சிங் தோனி தலைமையேற்று வழி நடத்திய போட்டிகளில் பல நெருக்கடியான தருணங்களில் அவர் காட்டிய தலைமைக்கான குணம் வேறு எவரிடமும் பார்க்க முடியாததாக உலகக் கிரிக்கெட் ரசிகர்களுக்கு இருந்தது.

தற்பொழுது சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு தலைமை ஏற்று நடத்தி வரும் மகேந்திர சிங் தோனி அந்த அணிக்காக ஐந்து கோப்பைகளை வென்ற கேப்டனாக இருக்கிறார்.

- Advertisement -

இவரது தலைமையின் கீழ் இளம் வீரராக ருதுராஜ் மிகச் சிறப்பான முறையில் விளையாடும் வருகிறார். தற்போது இவர் குறித்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் இரண்டாவது பெரிய வீரரான சுரேஷ் ரெய்னா முக்கியமான கருத்து ஒன்றைக் கூறியிருக்கிறார்.

அவர் கூறும் பொழுது ” மகேந்திர சிங் தோனியும் ருத்ராஜும் ஒரு விஷயத்தில் ஒரே மாதிரியானவர்கள் என்று நான் நினைக்கிறேன். அமைதியாகச் சிறப்பாக செயல்படுவதில் இருவரும் ஒரே மாதிரியே இருக்கிறார்கள்!” என்று கூறியிருக்கிறார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு அடுத்த கேப்டன் யார் என்று பேசப்பட்டு வரும் நிலையில் இவரது இந்தக் கருத்து மிக முக்கியத்துவத்தை பெற்றுள்ளது!