ரவிச்சந்திரன் அஸ்வின் போன்ற ஒரு ஸ்பின் பந்து வீச்சாளரிடம் இதை நான் கொஞ்சம் கூட எதிர்பார்க்கவில்லை – குமார சங்ககாரா

0
1033

2022ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டி நேற்று நடைபெற்றது.போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி முதலில் விளையாடிய ராஜஸ்தான் 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 130 ரன்கள் குவித்துள்ளது.
ராஜஸ்தான் அணியில் அதிகபட்சமாக ஜோஸ் பட்லர் 35 பந்துகளில் 39 ரன்கள் குவித்தார். குஜராத் அணியில் சிறப்பாக பந்து வீசிய ஹர்திக் பாண்டியா 3 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.

பின்னர் விளையாடிய குஜராத் அணி 18.1 ஓவர்களில் 7 விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணியை வீழ்த்தி ஐபிஎல் கோப்பையை கைப்பற்றியுள்ளது. குஜராத் அணியில் அதிகபட்சமாக கில் 45 ரன்களுடன் இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

- Advertisement -

ரவிச்சந்திரன் அஸ்வின் இன்னும் ஒருசில விஷயங்களில் தன்னை முன்னேற்றிக் கொள்ள வேண்டும்

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளர் குமார் சங்ககாரா ரவிச்சந்திரன் அஸ்வின் குறித்து ஒரு சில விஷயங்களை பேசி இருக்கிறார். இந்திய அணியைப் பொறுத்தவரையில் மிகச்சிறந்த ஸ்பின் பந்து வீச்சாளர் என்கிற அந்தஸ்தை ரவிச்சந்திரன் அஸ்வின் எட்டியிருக்கிறார். அவருடைய நிலைப்பாட்டிற்கு நடப்பு ஐபிஎல் தொடர் அவ்வளவு சிறப்பாக அமையவில்லை.

17 போட்டிகளில் அவர் 12 விக்கெட்டுகளை மட்டுமே கைப்பற்றியுள்ளார். இறுதிப் போட்டியில் 130 ரன்களை டிஃபெண்ட் செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருந்த பொழுது அவர் மூன்று ஓவர்கள் வீசி ஒரு விக்கெட்டை கூட கைப்பற்றாமல் 32 ரன்கள் கொடுத்து இருக்கிறார்.

- Advertisement -

அவருடைய பந்துவீச்சில் ஒரு சில விஷயங்களில் அவர் இன்னும் சற்று யோசிக்க வேண்டும் அதே போல அவர் தன்னை இன்னும் ஒருபடி முன்னேற்றிக் கொள்ள வேண்டும். குறிப்பாகஆஃப் ஸ்பின் பந்துவீச்சில் இன்னும் சற்று கவனமாக அவர் விளையாட வேண்டும் என்று அறிவுரை கூறியுள்ளார்.

நாங்கள் நினைத்தது நடைபெற வில்லை

- Advertisement -

நேற்றைய போட்டியில் மைதானத்திற்கு வந்து பார்த்த பின்னர் பிட்ச் சற்று வறண்டு காணப்பட்டது எனவே பேட்டிங் விளையாட முடிவு செய்தோம். இரண்டாம் பாதியில் ஸ்பின் பந்து வீச்சு எங்களுக்கு கைகொடுக்கும் என்று நம்பினோம் எனவே 160 முதல் 170 ரன்கள் குவிக்கலாம் என்று நினைத்தோம்.

ஆனால் எங்களால் அவ்வளவு ரன்கள் குவிக்க முடியவில்லை. அதேபோல எதிரணியில் கில் விக்கெட்டை எங்களால் ஆரம்பத்திலேயே கைப்பற்ற முடியவில்லை. நேற்றைய போட்டியில் நாங்கள் நினைத்தது எதுவும் நடக்கவில்லை என்று வேதனை தெரிவித்தார். அதேபோல எங்களுடைய அணியில் ஒரு சில விஷயங்களில் நாங்கள் இன்னும் எங்களை தயார்படுத்திக் கொள்ள வேண்டும். அடுத்த சீசனில் இவை அனைத்தையும் சரி செய்து இன்னும் பலமான அணியாக வருவோம் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

ரியான் பராக்கை இன்னும் சிறப்பாக தயார்படுத்த வேண்டும்

ரியான் பராக் டெத் ஓவர்களில் மட்டும் நன்றாக விளையாடும் வீரர்கள் அது அவரை இனி அடுத்த சீசன் முதல் சற்று மேலே இறக்கி விளையாட முயற்சி செய்ய இருக்கிறோம். ஸ்பின் பந்து வீச்சு மற்றும் வேகப்பந்து வீச்சு என இரண்டிலும் சிறப்பாக செயல்பட கூடிய திறமை அவருக்கு உள்ளது. அவரை இன்னும் சற்று சிறப்பாக தயார் படுத்தி அடுத்த ஆண்டு முடிந்தவரை ஏர்லி மிடில் ஆர்டரில் விளையாட வைக்க முடிவு செய்துள்ளதாக சங்ககாரா கூறியுள்ளார்.