“ஒரு பேட்டராக ரவீந்திர ஜடேஜாவை விட இவரது ரேஞ்ச் பெரியது” – இர்பான் பதான் பாராட்டு !

0
1410

இந்திய மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டியில் இந்தியா நீ ஒரு இன்னிங்ஸ் மற்றும் 132 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது . முதல் இன்னிங்ஸில் இந்திய அணியின் பந்துவீச்சில் ரவீந்திர ஜடேஜா பாரமாக பந்துவீசி 45 ரன்கள் விட்டுக்கொடுத்து 5 விக்கெட்களை வீழ்த்தினார். ரவிச்சந்திரன் அஸ்வினும் மூன்று விக்கீட்டுகளை கைப்பற்றினார் .

இந்திய அணியின் பேட்டிங்கில் கேப்டன் ரோஹித் சர்மா அபாரமாக ஆடி சதம் அடித்தார் . மேலும் இந்திய அணியின் ஆல்ரவுண்டர்களான ரவீந்திர ஜடேஜா மற்றும் அக்சர் பட்டேல் ஆகியோர் மிகச் சிறப்பாக ஆடி அரை சதம் அடித்தனர் . அதிலும் குறிப்பாக அக்சர் பட்டேல் 84 ரன்கள் எடுத்து இறுதியாக ஆட்டம் இழந்தார் .

- Advertisement -

சமீப காலமாகவே அக்சர் பட்டேல் பந்து வீச்சில் மட்டுமல்லாமல் பேட்டிங்கிலும் தனது சிறப்பான பங்களிப்பை அளித்து வருகிறார். டி20 மற்றும் ஒருநாள் போட்டி தொடர்களை தொடர்ந்து டெஸ்ட் போட்டியிலும் தனது பேட்டிங்கின் மூலம் தனது முத்திரையை பதித்திருக்கிறார் அக்சர். இந்நிலையில் இது குறித்து பேட்டி அளித்துள்ள இர்ஃபான் பதான் அக்சர் தன்னுடைய பேட்டிங்கை நன்றாக மேம்படுத்தி ஒரு திறமையான ஆட்டக்காரராக தன்னை உயர்த்தி இருக்கிறார் என்று பாராட்டியுள்ளார் . இதுகுறித்து ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனலில் அவர் அளித்த பேட்டியில் தெரிவித்தார் .

இது பற்றி பேசிய இர்பான் பதான்” அக்சர் பட்டேல் கிரிக்கெட் விளையாடும் விதம் மிகவும் புத்துணர்ச்சியுடன் இருந்தது . குறிப்பாக அவர் தன்னுடைய பேட்டிங்கை மிகவும் ரசித்து ஆடினார். அவரது பேட்டிங் மிகவும் மேம்பட்டுள்ளது . அக்சர் பட்டேல் மைதானத்தின் அதிகமான திசைகளில் பந்தை அடிக்கக்கூடிய ரேஞ்ச் அவருக்கு இருக்கிறது . ஒரு பேட்ஸ்மேன் ஆக ரவீந்திர ஜடேஜாவை விட அக்சர் பட்டேலின் ரேஞ்ச் சற்று பெரியது”எனக் கூறினார் .

மேலும் தொடர்ந்து பேசிய அவர் ” ஆடுகளத்தின் நேர்த்திசையிலும் அவரால் நேர்த்தியாக ஆட முடிகிறது . மேலும் கவர் திசையிலும் அருமையாக விளையாடக்கூடிய ஒரு வீரர் . பெரிய ஷாட்களையும் அழகாக ஆடுகிறார் . இவை தவிர ஸ்வீப் ஷாட்டையும் அவரால் நன்றாக ஆட முடிகிறது . இதன் மூலம் ஒரு தலைசிறந்த பேட்டராக தன்னை மேம்படுத்தி இருக்கிறார் அக்சர் பட்டேல். இவை தவிர வேகப்பந்து வீச்சாளர்களை விளையாடும்போது, ​​அவர் மிகுந்த நம்பிக்கையுடனும், மிகச் சிறந்த நுட்பத்துடனும் விளையாடினார்” என்று பாராட்டியுள்ளார் இர்ஃபான் பதான்.

- Advertisement -

மேலும் தொடர்ந்து பேசிய அவர் ” முகம்மது சமியின் மீது நம்பிக்கை வைத்து பத்தாவது விக்கெட் ஜோடியாக 52 ரன்களை சேர்த்தது இந்திய அணி . இது இந்திய அணியின் முன்னிலை உயர்வதற்கு ஒரு முக்கிய காரணமாக அமைந்தது . மேலும் ஒரு பேட்ஸ்மனாக அக்சர் பட்டேலின் முதிர்ச்சியை இது வெளி காட்டியுள்ளது” என பாராட்டினார் பதான்

முதல் டெஸ்ட் போட்டியில் அக்சர் பட்டேல் 174 பந்துகளில் 84 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது . இதில் 10 பவுண்டடிகளும் ஒரு சிக்ஸ் வரும் அடங்கும் . இவர் ரவீந்திர ஜடேஜா உடன் இணைந்து 88 ரண்களையும் முஹம்மது சமியுடன் இணைந்து 52 ரன்களையும் எடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது . போட்டியின் அந்த நேரத்தில் இந்திய அணியின் ஆதிக்கம் மேலோங்குவதற்கு இவை முக்கிய வாய்ப்பாக அமைந்தன .